மணல்வீடு

மணல்வீடு
""''''''''''"""""'"'''
இன்றைய நிகழ்வுகளை மாத்திரம்
பத்திரப்படுத்தி
மணல்வீடு ஒன்று
சிரிப்புக்களை பொத்திவைச்சு குறும்புத்தனத்தில் எழுந்து நிற்கின்றது!

பாட்டுவெய்யில், இளமைபொங்கி வழியும் ஈரமணல்,
எண்ணைவழிஞ்ச பிஞ்சுமுகம்,
அடுத்தவினாடிகளின் அவலம்அறிய விரும்பாத வெகுளித்தனம்!
களங்கம் தெரிய குழந்தை மனசு!

பாதிகால்சட்டை
ஈரம் குடிக்க!
கனவுதெரியாத! நிஜங்களை
நம்பாத!
தற்போதய சிநேகிதங்களை மாத்திரம் பாதங்கள்
கட்டிப்பிடிக்க!

வேர்த்துபோன
மேல்சட்டைகளில்
வாசனைகளை கெஞ்சிகேட்ட
வானம் !
பதிலாக வானவில்லை
பிரசவிக்கிறது!

தவறிப்போன சந்தோசம் ஒன்று
அடுத்த பிறவியில்
கிடைக்க வேண்டும்"""
என்று அடம்பிடிக்கும் மனசு
மணல் வீட்டையும் ஞாபகபடுத்துகிறது!!!

லவன்
"""'''''''''''''''

எழுதியவர் : லவன் (17-Feb-16, 5:15 pm)
சேர்த்தது : லவன்
பார்வை : 133

மேலே