பாசம்

பாசம்
""'''"""""
உனக்கான பிடிவாதத்தை நான்!
காதில் வாங்காமல் சமூக சம்பிரதாயங்ளை திரும்பிப்பார்க்காமல்
ஏன்? சுயநலவிரும்பியாக
நான் ஆசைப்பட்ட வாழ்வை
எனக்கு பிடித்தவனுடன் வாழஆரம்பித்த காலநகர்வில்!

ஒரு செம்பு நீரில்
என் உடன் பிறந்த நீயும்
உற்ராரும் என்னை கைகழுவிவிட்டு
ஒருபடிமேலாக சாபங்களையும்அமிலங்ளையும்
கழுவி ஊத்தினீர்கள்!

உங்களின் ஈரத்தில்
எங்களின் தன்மானம்
உழைப்பின் விளைச்சலாக விஸ்வரூபம்
எடுத்தாலும் சடங்குகளிலும்
சபைதனிலும் நாங்கள் கவனத்தில் ஈர்க்கப்படுவதில்லை!

தொடர்ச்சியான தள்ளிவைப்பில்
மனங்கள் குழம்பி சுயங்கள்
தள்ளாடும்போது ஏதோசில
உறவுகளின் கரிசனைகள் தோளில் தட்டி
நம்பிக்கையை புதிதாக விதைக்கும்!

பாசங்கள் அறுந்த தனிமை
பல யதார்த்தங்களை கற்றுத்தந்தாலும்
நாம் வாழ்வில் வெற்றிகண்ட
கம்பீரங்கள் கண்சிமிட்டினாலும்

நான் உன் நம்பிக்கை கோட்டை
தகர்த்து கடந்து வந்த

என் தன்னம்பிக்கை!
எங்களது சகோதரபாசத்தில்
கூனிகுறுகி நிற்கின்றது""""

மணித்துளிகளை அவசரமாக
விழுங்கும் காலநகர்வில்
ஒரு நோயில் அல்லது சதைகள்
தளர்ந்த முதுமையில்
நடந்தவற்றை மறந்து மன்னிப்புடன் கைகுலுக்கி
கட்டித்தழுவி ஆணந்தத்தை
கண்ணீரில் எழுதும்போது
நாங்கள் பிரிந்துஇருந்த
கால்நூற்றூண்டு காலம்
பாவம்! என்ன தவறு செய்தது?

நாம் அதனுள் வாழ்ந்ததை தவிர
இவ் இடைவெளியில் எவ்வளவு
சந்தோசங்களை தொலைத்திருப்பபோம் """'என்று
கணக்க பார்க்கிறது என்
ஆழ்மனசு!!!

லவன்
""''''"""""

எழுதியவர் : லவன் (17-Feb-16, 5:38 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : paasam
பார்வை : 75

மேலே