வாழ வைக்கும் காதல்

அன்று முகம் தெரியா கனவு ஒன்று
உன் வடிவில் நிஜமாக கை சேர்ந்தது ...
காதலை பற்றி நான் அறியேன்
அறிந்தேன் அதை உன்னால்
உணர்வுகளால் உன் கை பிடியாக இருந்தும்
உன் கை பிடித்து பயணிக்க மனம் துணிந்தேன் ...
காதல் பிழை என்பார்கள்
சாதி மதத்தினாலும் மாற்றத்தினாலும்
நான் பிழை என்று சொன்னேன்
என்னை இன்ப சிறையில் நீ அடைத்ததினாலே ...
உன்னால் நானோ இன்று காட்சி பிழை
காணும் இடங்களிலெல்லாம் நீ
முன்பு உன்னிடம் பேச வார்த்தை தேடி
காற்றோடு பேசினேன்
பின்பு காற்று என்னை தொட்டாலும்
அதை உன் கரம் என்று எண்ணி இன்புற்றேன்
நீ காற்றாக எங்கும் நிறைந்தாய்
சுவாசம் என இதயம் கலந்தாய்
நீயில்லாமல் உயிர் இல்லை என்று பாட வைத்தாய்
இன்று பிரிந்து போய் தனிமையில் வாட வைத்தாய்
வாழும் ஆசைக்கு முற்று புள்ளி நீ வைத்தாய்
உன்னால் காதல் தைத்த இதயம்
முள் தைத்தது போல் அனுதினமும் துடி துடித்தாலும்
ஒன்றாய் வாழ்ந்த நம் நினைவு வாழ்வை வெறுத்தாலும்
வாழ ஆசைக் கொள்கிறேன் உண்மை காதலில்
நான் கொண்ட வாழ்க்கைக்காக ...
........... வாழ வைக்கும் காதலை
வாழ வைக்காமல் சில காதல் போனாலும்
காதல் அழிய போவதில்லை
தோல்வியில் கண்ணீர் சுமபவர்களை
தோல்வி கண்டவரே தோற்காத காதலை
வாழ வைக்கவும்
காதல் அவர்களை வாழ வைக்கவும்
அழியாமல் வாழும் காதல் ..............