ஏன் இந்த மாற்றம்

ஏன் இந்த மாற்றம்
உன்னால் நான் இன்று பூந்தோட்டம்
எங்கும் இன்பம்
எதிலும் இன்பம்
தந்தது காதலா நீயா
யோசித்து யோசித்து பூக்குது என் ஆசை
இமை இமைக்காமல் இருந்தால்
என் கனவில் நீ இருப்பாய் என்று அர்த்தம்
கண்னை இறுக்கமாக மூடிக்கொண்டேன் என்றால்
என் தூக்கத்தை நீ கெடுப்பாய் என்று அர்த்தம்
தனிமையில் சிரித்தால்
வந்தது உன் நினைவு என்று அர்த்தம்
சிறகு முளைக்காமல் மிதந்தால்
முளைத்தது உன் காதல் என்று அர்த்தம்
அர்த்த சாமத்தில் நான் எழுந்து
கண்ணாடியை பார்த்து ஒத்திகை செய்தால்
நாளை உன்னிடம் என் காதலை சொல்ல ஆசை கொண்டேன் என்று அர்த்தம்
வராத கவிதையை மனம் மட்டும் வாசித்தால்
அது கொண்டது ஒருதலை காதல் என்று அர்த்தம் .....