நிராகரிப்பின் வலிகள்
சொல்லிதான் தொலைத்து விடு
உன் காதலை
தினம் தினம் கனவில் வந்து
கொலை செய்யும்
அந்த... விழிகளுக்காக...
பேசாமலே கொல்லும்
அந்த... மௌனத்திற்க்காக...
பேசியே கொல்லும்
அந்த... விழிகளுக்காக...
கண்ணீர் கடலில் இருந்து
என்னை... மீட்பதற்க்காக...
காலை கதிரவனை
நான்... பார்ப்பதற்க்காக...
பகல் பொழுதும் சூரியன் இருப்பதை
நான்... உணர்வதற்க்காக...
என்னை சூழ்ந்த காரிருள் மேகத்தை
கலைப்பதற்க்காக...
என் வீட்டின் குவளை தண்ணீர்
குறைவதற்க்காக...
என் வீட்டு தோட்டம் வாடிவிடாமல்
இருப்பதற்க்காக...
கண்ணில் கடல் நீர்
வற்றுவதற்க்காக...
வேண்டாம்!!!
நீ சொல்ல வேண்டாம்
அடுத்த ஜென்மத்தில்
உன் வயிற்றில்
நான் ஜெனிப்பதற்க்காக...