காதலியே ஏன் என்னை பிரிந்தாய்

காதலியே ஏன் என்னை பிரிந்தாய்?
உனது இப்பிரிவினால்
எனது இதயத்துடிப்பே இடியோசையானது
எனது அறை கல்லறையானது
சுவாசிக்கும் காற்று அனலானது
உடுத்தும் உடையும் ஒரு சுமையானது
புன்னகை கூட வெறும் நடிப்பானது
கண்ணிமைப்பதும் கடுஞ்செயல் ஆனது
நிகழ்காலம் எதிர்காலம் யாவும் பொய்யானது
கடந்தகால நினைவுகளே கண்ணிற்குக் காட்சியானது
உன்னை விரும்பிய என்னை விடுத்து
மரணத்தை ஏன் கரம் பிடித்தாய் அன்பே ?
உன்னுடன் தனிமையை விரும்பிய நான்
இன்று தனிமையுடன் உன்னைத் தேடி அலைகிறேன்