வறுமையின் விளிம்பில்
கண்கள் கலங்கியது...
கடைக்கோடியில் ஒருபிடி சோற்றை
ஒன்றுகூடி பகிர்ந்துண்ணும் காக்கை இனத்தைக்கண்டு....!
தனிமனிதன் ஒருவனுக்குணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம் என்றான்
என் பாசமிகு பாரதி.....
சகம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது.....
இல்லாதவனை எட்டி மிதிக்கும்
ஈனங்கெட்ட சமூகத்தில் சிக்கி....!
தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கும்
கிழட்டு சமூகமோ....
பாடையிலே படுத்துக்கொண்டு பரலோகம் போகும்போது.....
பூப்பந்தலிட்டு பொன்விழா நடத்துகிறது
கொடைக்கூலி ஏதுமின்றி......!!
-இவன்
-சதீஷ் ராம்கி.