தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-8

“இது ஊத காத்து வீசும் நேரம்
என் தேவ மங்கை எங்கே காணோம்
காத்திருந்த கண்கள் தோத்து
கண்ணீரில் பாடுது சோக கானம்”

( இது ஊத காத்து )

காதலை காணும்வரை கண்களுக்கு ஓய்வில்லை
காதலை கண்டுவிட்டால் பண்களுக்கு குறைவில்லை
அலைகள் ஓய்வெடுக்க காற்று விடுவதில்லை
அன்பே உன்னை மறக்க நெஞ்சில் துணிவில்லை

( இது ஊத காத்து )

மாளிகை என்றாலும் காதலுக்கு மண்குடிசை
மரக்கூடு ஆனாலும் காதலுக்கு மாடமாளிகை
பெற்றவரை துறப்பதற்கு துணியும் இன்ப காதல்
கொற்றவளே உன்னை அடையும்வரை எனக்கில்லை- சாதல்

( இது ஊத காத்து )


அன்புக்கு அடிபணிந்து ஆசைக்கு இணங்கி விட்டால்
காத்து வந்த காதலுக்கு அர்த்தமின்றிப் போகும்
உரிமைக்கு குரல்கொடுத்து உணர்வுக்கு துணைநின்றால்
காலமெல்லாம் காதலுக்கு ஜென்மப்பலன் கூடும்

( இது ஊத காத்து )

ஏஞ்சலாள் அவள் முகம் - எனக்காவே வடித்த முகம்
அம்முகத்தை காணாமல் - தினம் வாங்குது என் முகம்
ஊஞ்சல் இங்கிருக்கு - அவள் கூந்தல் எங்கிருக்கு..?
ஊதக்காத்தே நீ சொல்லு ! எனக்காக தூது செல்லு..!

( இது ஊத காத்து )

எழுதியவர் : இரா.மணிமாறன் (17-Feb-16, 9:12 pm)
பார்வை : 109

மேலே