நன்றிகெட்ட உலகமடா

நன்றிகெட்ட உலகமடா தோழா -இதில்
நாகரீகம் புதைந்ததடா....!

பணத்திற்காக எதையும் விற்கும் மிருகக்கூட்டமடா-இது
நல்ல குணமிருந்தால் எட்டியுதைத்து
ஏளனம் பேசுமடா....!!

வெளுத்ததெல்லாம் பாலென்று நினைத்துவிடாதே -தோழா
இதில் வெறிநாய்கள் பலஉண்டு மறந்துவிடாதே....!

உதட்டோடு உறவாடி உழிரைப்பறிக்கும்
ஒனாய்கூட்டம் உலவுதடா.....

இங்கு உண்மைக்கு குரல்கொடுக்கும் சில
உண்மையான மனிதக்கூட்டம்
உதைபட்டே சாகுதடா...!

நாட்டைக் கூறுபோடும்
நயவஞ்சக நரிகள்கூட்டம் வாழுதடா-இங்கு

நாணயம் அழிந்துபோய்
வெகுநாட்கள் ஆனதடா....!!

ஏழைகளின் தோழன்.....

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (18-Feb-16, 12:02 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 594

மேலே