நீ வரும் வரை-15

நீ வரும் வரை-15

வேண்டுமென்றே தொலைத்துவிட்டேன்...
எனக்கு வேண்டும் என்று
நான் கேட்ட அவனை தான்
வேண்டுமென்றே தொலைத்துவிட்டேன்...
சில நேரங்களில் விதி வென்றுவிடுகிறது...
நானோ அவனை தோற்று நிற்கிறேன்....
வேண்டுமென்றே தோற்றுநிற்கிறேன்....


(முன்கதை சுருக்கம்- ரவியை பார்த்த அதிர்ச்சியிலும், மனக்குழப்பத்திலும் இருக்கும் பிரியாவை பாலா வெளியே தனியாக அழைத்து செல்கிறான், அவர்கள் இருவரும் சென்றது முதன்முதலாக ரவியோடு பிரியா சென்ற அதே ஹோட்டல்க்கு தான்..இந்த அதிர்ச்சியிலிருந்து அவள் மீள்வதற்குள் அடுத்தபடியாக ரவியோடு பிரியா இருந்த அதே டேபிளில் பாலா அமர பிரியா எதுவும் பேசமுடியாமல் பழைய நினைவுகளோடு பாலாவோடு அமர்ந்தாள்)

அவர்கள் ஆர்டர் செய்த காபி வர இருவரும் குடிக்காமல் பாலா பிரியாவை பார்க்க பிரியாவோ பயம் கலந்த கவலையில் டேபிள் மேல் கோலம் போட்டு கொண்டிருந்தாள்...

பிரியா காபி பிடிக்கலையா?, வேற ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா? என்று பாலா கேட்க...
இல்ல, இல்ல அப்படிலாம் ஒண்ணுமில்ல...காபியே போதும் என்று பிரியா குனிந்தபடியே கூற...
என்ன பிரியா இப்படி சொல்லிட்ட, ஒருவேள வேற ஏதாவது ஆர்டர் செஞ்சா இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்ட்டிங்கான மீட்டிங்கா இது இருக்கும்னு பாத்தா இப்படி சொல்லிட்டே என்று பாலா சலித்துக்கொள்ள ... இவன் என்ன சொல்கிறான், இருக்கற குழப்பத்துல இவன் வேற புரியாத மாதிரியே பேசிட்டு இருக்கானே என்று மனதிற்குள் புலம்பியபடியே "நீங்க என்ன சொல்றிங்க, எனக்கு புரியல" என்று வெளிப்படையாக அவனிடம் கேட்க அவன் சொன்ன பதிலோ அவளை மேலும் மேலும் குத்தி கிழித்தது...

"இல்ல பிரியா, இப்போ.. வேற ஏதாவது ஆர்டர் செஞ்சா, அத நான் உனக்கும், நீ எனக்குமா ஊட்டிவிட்டு இந்த மீடிங்க இன்னும் பியூட்டியா ஆக்கிருக்கலாமே" என்று கண்களில் ரொமாண்டிக் மூட் தெறிக்க பிரியாவின் முகத்தையே பார்த்தபடி கூறியவனை நிமிர்ந்து கூட பாக்கமுடியாமல் மனதுக்குள்ளே நொறுங்கிபோனாள் பிரியா....

எவனை மறக்க வேண்டும், எதையெல்லாம் மறக்க வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சிக்க நினைத்தாளோ அவனையே நினைக்கும்படியாக செய்கிறானே இவன் என்று சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் திணறிகொண்டிருந்தாள்....

என்ன பிரியா, வெட்கப்படறியா....இப்படியே வெட்கப்பட்டுட்டே இருந்தால் இந்த ஜென்மத்துல நாம பேசிக்க கூட முடியாது...நிமிர்ந்து என்ன பாரு, என்கிட்டே பேசு..என்ன பிடிச்சிருக்கான்னு சொல்லு என்று அவளிடம் உத்தரவு போடுவதாகவும் இல்லாமல் கெஞ்சுவதாகவும் இல்லாமல் அவனுக்கான தனி ஸ்டைலில் அவன் கேட்க அவன் அப்படி பேசும்போது யாருமே மறுப்பு சொல்ல முடியாது என்று இருக்கும்போது பிரியா என்ன செய்வாள்...

சரி வேறு என்ன வழி... பேசி தான் தொலைப்போம் என்று சிறிது கோவத்தோடு இருந்தவளுக்கு புதிதாக ஒரு யோசனை...அவனே "என்ன உனக்கு பிடிச்சிருக்கான்னு" கேள்வி கேட்கறான், இப்போ நாம பிடிக்கலன்னு சொல்லிட்டா என்ன...

சொன்னதுக்கப்புறம் என்ன நடந்தாலும் பாத்துக்கலாம், இப்போதைக்கு நம்ப பிரச்சனைய பத்தி இவர்கிட்ட பேசிடலாமே என நினைத்தவளுக்கு பின்னால் இதை செய்வதால் என்ன விளைவுகள் எல்லாம் வரும் என்று அப்பொழுது அவளுக்கு இருந்த மனநிலையில் யோசிக்க கூட தோன்றவில்லை..

தன் குழப்பத்தையும், பிரச்சனையையும் சொல்லிவிடுவோம் என்று நிமிர்ந்து அவள் அவனோடு பேச வாயெடுக்கையில் எல்லா சினிமாக்களிலும் காட்டும்படியாக ஹீரோயின் தன் காதலை பற்றி தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம் கூற நினைக்கும்போது ஒரு இடைஞ்சல் வருமே அதே போல தான் அவளுக்கும் வந்தது...

வேறு என்ன இதில் பெரிதாக ட்விஸ்ட் வந்துவிட போகிறது, வேறு ஒன்றுமில்லை...பாலாவுக்கு அவன் ஆபிஸிலிருந்து கால் வந்தது..எடுத்து தீவிரமாக எதை எதையோ பேசி கொண்டிருந்தான்...பிரியாவோ அவள் மனபோராட்டதிலேயே ஈடுபட்டிருந்ததால் அவன் பேச்சும் புரியவில்லை.... அவனின் நடவடிக்கையும் புரியவில்லை..

இறுதியாக அவன் "பிரியா.... ஐ யம் ஸோ சாரி, மை டியர், மை ஸ்வீட்டி...இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, ஜஸ்ட் ஒரு பத்து நிமிஷ வேலை தான்...இப்படி போயிட்டு அப்படி வந்துருவேன்....ஒண்ணும் இல்ல, இங்க பக்கத்துல தான், அதுவும் பக்கத்து ஹோட்டல்ல தான்...ஒரு முக்கியமான கெஸ்ட் வந்துருக்காரு, ஆபீஸ் விஷயமா அவர்கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு, அதுக்கு அவரோட அப்பாய்ன்மெண்ட் வாங்கணும்...

போன்ல கேட்கறது மரியாதையா இருக்காது, வேற யாரும் இந்த வேலைக்கு அனுப்ப முடியாது..நம்ப செய்ய வேண்டிய வேலைய நாம செய்றது தானே முறை....அவர வெல்கம் பண்ணி சின்னதா ஒரு இன்ட்ரோடக்ஷன் குடுத்துட்டு அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டு வேகமா வந்துடறேன்...ஓகேவா மை ஸ்வீட்டி, கோவிச்சிக்காத...என் சுட்சிவேஷன புரிஞ்சிக்கோ என்று அவன் பாவமாக கெஞ்ச, பிரியாவோ அவன் கொஞ்சிய ஸ்வீட்டி,டியர் வார்த்தைகளை தாங்க முடியாமல்..போகறதுனா போய் தொலைய வேண்டியது தானே..எதுக்கு இப்படி கொஞ்சனும், பெரிய ரோமியோனு நினைப்பு..என்று மனதுக்குள் திட்டியவாறு நோ ப்ராப்லம்...நீங்க போயிட்டு வாங்க, நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்று பிரியா கூற...

நோ,நோ.. நாம பிக்ஸ் பண்ண நம்ப மீட்டிங்க கான்செல் பண்ணகூடாது, ஒண்ணும் இல்ல ஒரு பத்து நிமிஷத்துல நான் வந்துடுவேன்..நீ அதுவரை பொறுமையா ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்ட்டுட்டு இரு...நான் சீக்கிரமா வந்துடறேன் என்று அவளை விடாபிடியாக அங்கே இருக்க வைத்துவிட்டு கிளம்பி விட்டான் பாலா...

ஆனால் அவன் அவனுக்கே ஆப்பு வைத்து கொள்கிறான் என்று அவனுக்கு எப்படி தெரியும்...

வேண்டாவெறுப்பாய் அந்த காப்பியை குடிக்க ஆரம்பித்தாள்...பழைய விஷயங்கள் நியாபகத்துக்கு வர போகிறேன் வர போகிறேன் என்று மிரட்ட இவளோ அதை நினைத்தால் உடைந்து போய் அழுதுவிடுவேனே என்று அதை நினைக்க கூடாது என்ற உறுதியோடு அங்கிருந்த ஒவ்வொன்றையுமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்...

தண்ணீர் டம்ளரை இங்கும் அங்குமாக நகர்த்திக்கொண்டு அதிலிருந்து சிந்திய தண்ணீரில் கோலம்போடவும் செய்தாள்....

இப்படியாக பத்து நிமிடங்கள், பதினைந்து நிமிடங்கள் என்று கடக்க அதற்கு மேல் பிரியாவால் பொறுக்க முடியவில்லை...என்று பிசினஸ்மான்ஸ் தான் குடுத்த வாக்கை தன் காதலியிடம் காப்பாத்திருக்கிரார்கள், அவர்கள் சொன்ன நேரத்திற்கு வருவது சாத்தியபடாத ஒன்றாயிற்றே, இதுவே இவளும் அவனை விரும்பியிருந்தால் அவனோடு சண்டை போட தயாராயிருப்பாள்...ஆனால் இப்பொழுதோ விட்டால் போதும் என்று அங்கிருந்து கிளம்ப மட்டுமே துடித்து கொண்டிருந்தது அவளது இதயம்...

அவள் துடிப்பை அதிகம் செய்யும்படியாக அவள் அந்த டேபிளில் இருந்து எழவும் அவன் அவள் அருகில் வரவும் இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்றாக கலக்கவும் சரியாக இருந்தது..

வேறு யாரு, நம்ப ஹீரோ ரவி தான் பிரியாவின் முன்னே கம்பீரமாக நெஞ்சில் அவள் மேல் கொண்ட காதலோடு நின்றுகொண்டிருந்தான்....

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்ற நெஞ்சமோ இதற்குமேல் தாங்காது என்று பிரியாவை கைவிட்டுவிட பிரியாவோ பலவீனமாகி நிக்க கூட தெம்பில்லாமல் டொப்பென்று நாற்காலியில் அமர்ந்தாள்...

உண்மையிலேயே இந்த சர்ப்ரைஸ் ரொம்ப நல்ல இருக்கு, உன்ன தேடி கண்டுபிடிக்கமுடியாம நாம ஒன்னா இருந்த ஹோட்டல்லயாவது கொஞ்ச நேரம் இருக்கலாமேனு வந்தா, நான் தேடிக்கிட்டு வந்த தேவதை என் கண்முன்னாடி அதுவும் நாம ஒன்னா சேர்ந்து சாப்ட அதே டேபிள்ள உக்காந்திட்டு இருக்கா...

பிரியா நான் வருவேன்னு தெரியுமா, நீ தனியா இருக்கறத பாத்தா நான் வருவேன்னு தெரிஞ்சி ஏதோ எனக்காகவே காத்துட்டு இருக்கறமாதிரி தெரியுது...எது எப்படியோ நான் என் வாழ்க்கையை கண்டுபிடிச்சிட்டேன் என்று அதிர்ச்சிகளால் சில்லிட்டு போயிருந்த பிரியாவின் கைகளை பிடித்து கொண்டு உணர்ச்சிவசப்பட்ட படியே சிறிது நேரம் அவளையே பார்த்துகொண்டிருந்தான்....

பிரியாவோ என்ன நடக்கிறது என்று உணரும் முன்னாள் ரவி எல்லாத்தையும் பேசிமுடித்துவிட்டான்...அவன் பேசியதிலிருந்தே ரவி தன்னை மறக்கவில்லை, இத்தனை நாள் தனக்காக தான் காத்துகொண்டிருந்தான், ஏங்கி கொண்டிருந்தான் என புரிந்தது....

பிரியாவுக்கோ சந்தோஷத்தில் என்ன சொல்வது என்றே புரியவில்லை, தானும் உனக்காக தான் காத்து கொண்டிருந்தேன் என்று சொல்லி அவன் கைகளுக்குள் முகம் புதைத்து இத்தனை நாள் உள்ளுக்குள் தேக்கி வைத்த உணர்வுகளை கண்ணீரால் கொட்டி விட வேண்டும் என்று அவள் துடித்துகொண்டிருந்த தருணத்தில் எல்லாம் சில நிமிடங்களில் மாறிப்போனது....

சந்தர்ப்பவசத்தால் பிரியா கூறிய ஒற்றை பதிலில் மனம் ஒடிந்து, மிடுக்காக இருந்த மார்பின் மேல் கத்தி வைத்து கிழித்ததை போல ரண வலியோடு உயிரற்று வெற்று உடலை சுமந்து கொண்டு திரும்பி போனான் ரவி...
எல்லாவற்றையும் சந்தர்ப்பவசத்தால் பால்படுத்திவிட்டு ரவியையும் தொலைத்துவிட்டு அழுதுகொண்டிருந்தாள் பிரியா....

அப்படி என்ன நடந்தது?..

எழுதியவர் : இந்திராணி (20-Feb-16, 2:50 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 336

மேலே