தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-12

“ஜிகினா பூசிய ஜகன் மோகினி
காதலில் ஜகா வாங்குவது ஏன் நீ ?
இந்த ஜெகா இருக்கேன் உனக்கு - காதல்
மெகா கூட்டணி அமைப்போம் வா நீ.!”

இந்தியன் இரயில்வே தேசம் முழுவதும்
இயங்குவது போலே
என் இதயம் முழுவதும் நீதானே - காதல்
தண்டவாளம் ஆனாயே.!
வாளெடுத்து போர்த்தொடுத்த ஜான்சிராணி போலே
என் இருதயத்தை மீட்டெடுக்கும் காதல்வாணி நீயே..!


இந்தக் கொருக்குப்பேட்டை குமாருக்கு - காதல்
கிறுக்குப் பிடிச்சிருக்கு
அந்தக் கிறுக்க சரி செய்ய வருத்தமென்ன உனக்கு..?
செருப்பை காட்டும் ஜாதியில் நீ பிறக்க வில்லை
அர்த்தமுள்ள காதலெனது ஏத்துக்கடி முல்லை..!

பருவத்தில் இருக்கும்போதே பயிர் செய்ய வேணும்
பருவம்தவறி பயிர்செய்தால் பாதிவிலைதான் போகும்
குமரிக்கும் அது பொருந்தும், குமரியே நி விரும்பும்
குமரன் நானாக, குடியிருக்க விட வேண்டும் !

மாரத்தான் ஓட்டத்திலே மைல்கல் அடைவோர்க்கு
மாவட்ட எல்லையில், ஆரத்தி எடுப்பது போல் –
மன்மத வித்தையில் எல்லைக்கோட்டை அடைவதற்கு
மாலதி உன்னுள் என்னை அனுமதிக்க வேண்டும்..!

எழுதியவர் : இரா.மணிமாறன் (21-Feb-16, 3:52 pm)
பார்வை : 89

மேலே