கண்ணீர்
அமிர்தமடா...
தாய் தந்ந தாய்ப்பால்
அமிர்தத்தையே சுவைத்து விட்ட உனக்கு
ஏனடா மது என்னும் மயக்கம்...?
பல்லாண்டு பல்லாண்டு
பலநூறு ஆண்டு...
வாழ வேண்டிய உனக்கு
ஏனப்பா இரண்டே நிமிடத்தில்
உயிரை விடும் சிகரெட்டு...?
சுதந்திர பறவையாய் ...
இருக்க வேண்டிய வயதில் - வீணே
சிறைப்பறவையாய் சிக்கிக்கொண்டாய்
நீயும் சினிமாவில் இங்கே...!
செல்லமாய் வளர்த்த பிள்ளை ...
செல்போன் கேட்டான்
வாங்கிக்கொடுத்தேன்...
அவனோ செல்போனின் செல்லப்பிள்ளையானான்...!
மனதும் கெட்டது
வீணே மூளையும் கெட்டது ...
செல்லமாய் வளர்த்த பிள்ளை ஆனான்...
செல்லாக்காசாய்...!
பாடுபட்டு படிக்கவைத்தேன்
பட்டம் பெறுவானென்று ...
அவனும் தான் பெற்றுவிட்டான்
பட்டங்களும் இங்கே.....
.......
எனக்கென்னவோ சந்தோசமில்லை...
அவன் பெற்றதோ
ஊதாரிப்பட்டம்...!
வாலிப வயதில் பைக் கேட்டான்
நானும் வாங்கிக்கொடுத்தேன்....
யமஹாவின் போட்டியில்
யமன் முந்திக்கொண்டான்....!
விளையாட்டு பிள்ளையே...
எதை நீ சாதித்தாயடா
வீணாண வேகத்தால் ...?
உன் உயிரையே போக்கிக்கொண்டாய்
இந்த பொல்லாத மோகத்தால்...!
மணமாலை காணும் வயதில்....
நிரந்திரமாய் மாலையிட செய்தாய்...
உன் படத்திற்கு ...!
தனித்தே போராடி
உன்னை ஆளாக்கிய என்னை ...
நிரந்திரமாய் தனிமைபடுத்தி சென்றாயடா ?
விடையில்லா கேள்விகள்...
கண்ணீரை மடலாகத் தொடுத்து விட்டு ...
என் கனவுகளை தொலைக்க செய்த
உன்னை எண்ணிய படி ...
கவலையுடன் போராடிக்கொண்டிருக்கும்..
உன் தாய்க்கு என்ன பதில்
சொல்ல முடியுமடா உன்னால்....???
- கீதா பரமன்