அதிகாரம்
மகளே .....
புதுமைகளே....
புது மகளே....
உன் திருவடி
பட்டதும்
நம்மனை
கொண்டது
புது அலங்காரம்...
ஓடி ஓடி
ஓய்வின்றி
உழைக்கும் நீ
அழகிய கடிகாரம்....
தங்கமகள் நீ...
எம்மகன்
எனக்கிழைத்த
உபகாரம்...
மகளே ...
புது மகளே...
என் மருமகளே....
நீ குடி
கொண்டதால்
என் மனை
கோவிலானது....
வெண்சிலையே...
இனி உன் கையில்
முழு அதிகாரம்.....