மண்ணின் காதலர்கள்

வெந்தனலானாலும்
சோரம் போக சொந்த மண்ணே
எந்தன் மனதில் வைத்து
பூசிக்கின்றேன் உன்னையே

கவிதையாய் உனை
காதல் செய்த கவிஞர்கள்
உன் கருவறைக்குள்ளே
தாய் மண்ணை காப்பது
கடமையென கொண்ட அறிஞர்கள்
உன் தெருவினிலே

இதயம் கணக்கிறது இடிந்த போன
தேசத்தை காண்கையில்
தசையும் ஆடுகிறது என்
மண்ணின் நிலை கண்டு

குருதி வெடுக்கோடு எனது
இனம் குன்றிக்கிடக்கின்றது
உறுதி வேட்டோடு குலம்காக்கும் குலத்தவர்
சிதறிக்கிடக்கன்றார்கள்

பூச்சோரியும் முற்றம்
சுகந்தம் வீசும் காற்று
வாவிகளின் கலகலவென்ற பாய்ச்சல்
பொன்னாடை போர்த்தியது போல்
காய்த்து நிற்கும் வயல்கள்
இளைப்பாற இயற்கை மரச்சோலைகள்
இதர்ற்காக உயிர்விடத்துனியாதோர்
இருந்தென்ன பயன்
அனைத்தையும் இழந்து
கிடக்கின்ற தாயவளை
காத்திட துனியாத மனமென்ன மனமோ

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (22-Feb-16, 2:00 pm)
Tanglish : mannin kathalargal
பார்வை : 135

மேலே