22-02-2016 குறும்பா வெள்ளம் -02

கொட்டியது வானம்
கிட்டியது நிவாரணம்
வெட்டியவர் காட்டிலும் மழை!--01
***
புட்டியோடும் பிரசாரம் கேட்டு
குட்டியோடும் வாக்குப் போட்டு
முட்டி போடுகிறான் தமிழன்!--02
***

ஐந்தாண்டு மழைஓய்ந்து
அடித்துப் போயின கொடிக்கம்பங்கள்
புதுப்பிக்க வருது தேர்தல்--03
***
சூரியன் வந்தால் என்ன
சந்திரன் வந்தால் என்ன
எங்கள் கூறையோ
எப்பொழுதும் ஓட்டையில்!--04
***
பொங்கியது கடல்
போட்ட கழிவுகள்
போதுமென்பதுபோல்--05
***
செய்தியாகவில்லை
செய்தித்தாள் போடுபவன்
செய்தித்தாள் போடும்வரை!--06
***
சலனமின்றி நீந்துகிறாள்
எங்களூர் அழகி!!
நிலா!--07
***
காய்ந்திருக்கும் பயிர்கள்
வானம் பார்த்து
கட்டியதார் அணையை
அங்கு!--08
**
பெய்தால் வரவேற்போம்
பெய்துகொண்டே இருந்தால்
இதென்ன 'டாஸ்மாக்'கா?--09
**
மயில்தான் நமது சின்னம்
வேண்டுபவரெல்லாம் பிடுங்கிக்கொள்ளலாம்
வலிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!--10
***

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (22-Feb-16, 8:30 am)
பார்வை : 77

மேலே