வானர மனமே
அடங்க மறுத்து
அடம் பிடிக்கிறாய்
சிந்திப்பதை விடுத்து
ஒரு நாழிகையேனும்
நிம்மதியாய் ஓய்வெடு
என்றாலும் கேட்பதில்லை ...
என்னையும் சூடேற்றி
அனல்வார்த்தை
கக்க வைக்கிறாய்
நொடிக்கு நூறு நினைவுகளில்
அல்லாட விடுகிறாய் .....
நிலையாய் இல்லாமல்
தடுமாறுகிறாய்
தாவுகிறாய்
குழம்புகிறாய் குழப்புகிறாய்
தொலைகிறாய் தொலைக்கிறாய்
தேடுகிறாய் ஓடுகிறாய் ....!
வானர மனமே ....வதைக்காதே ...!!