மொழிக் கலப்பு

தமிழின் புகழ் உலகறியும்
அறியான் தமிழ் நாடன்
கலவாமை முடியா திவனால்
அகல வேண்டும் அவனறிவாள்
வடக்கு செல்ல தமிழ்க்குறையும்
தென்னாட்டில் (தென் தமிழ்நாடு)ஆங்கிலக் கலப்பு
வடநாட்டில் (வட தமிழகம்) தமிழ்க் கலப்பு
ஆறரிவு உனக்கு உண்டு
அத எடுத்தாள பயமெதற்கு
வணக்கம் இனிக்கும் இயம்பையிலே
வந்தோன் மொழி(ஆங்கிலம்)ஏன்பயலே
தயக்கம் எடுத்தாய் தமிழ்பேச
ஆங்கிலம் தொடுத்தே நீவீச
ஆங்கிலம் மட்டுமியம்ப இடமிருக்கு
தமிழ் மட்டுமியம்பும் இடமிருக்கா
சொல்லடாத் தமிழா சொல்..!

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (22-Feb-16, 11:34 pm)
பார்வை : 87

மேலே