சோதனை

பிரச்சனையின்
மறு பெயர் சோதனை
சோதனை வரும்போது
சோதனைக்கு சரணாகதி
அடைந்தால்

வேதனை என்னும் தீ
அணைத்து கொள்ளும்
வேதனை என்ற நெருப்பு விழுங்கினால்
வாழ்வும் வினா ஆகும்

சுறாவளி அடித்தாலும் நீண்ட
ஆணிவேர் கொண்ட
மரங்கள் சாய்வது இல்லை

அது போல பிரச்சனை என்ற
சூறாவளி வரும் போது
உயந்த எண்ணங்கள் கொண்ட மனம் என்ற
ஆணிவேர் இருக்கும் மனிதனை
எந்த பிரச்சனையும் சாய்ப்பது இல்லை

காயங்கள் இன்றி மாந்தன் வாழ்வு
இல்லை இது இறைவன் படைப்பு
சோதனையை சாத்தியம்மாக மாற்றுவது
மனித வாழ்வு

எழுதியவர் : கலையடி அகிலன் (23-Feb-16, 10:33 am)
Tanglish : sothanai
பார்வை : 1447

மேலே