காத்திருப்பு

காத்திருப்பு சுவாரஸ்யமானது....
யோசிக்கவும் வைக்கும்,கொஞ்சம் யாசிக்கவும் வைக்கும்.
பாடமும் சொல்லும்,பரதேசியாகவும் மாற்றும்.
பணியவும் வைக்கும்,துணிவும் கொடுக்கும்.
தனிமையைக் கொடுக்கும்,தன்னம்பிக்கைப் பெருக்கும்.
காத்திருப்பு கொடுமையானது.....
அடக்கியும் வைக்கும்,ஆணையும் ஈடும்.
காதை பிடிக்கும்,கழுத்தை நெரிக்கும்.
மறக்கவும் செய்யும்,மன்றாடவும் செய்யும்.
தள்ளி வைக்கும்,தற்கொலைக்கும் தூண்டும்.
- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (23-Feb-16, 11:20 am)
பார்வை : 258

மேலே