அழகின் அடையாளம்

கார்முகிலை விட கருமை அவள் கூந்தல்....
போர்வாளை விட கூர்மை அவள் கண்கள்......

மின்னல் கீற்றுகள்
குடிகொண்டுள்ள அவள் அதரம்..

தமிழக கோவில்களையே
மலைக்க வைக்கும் அவளின்
முன் கோபுரங்கள்....

நாணலும் நாணம் கொள்ளும்
அவள் வளைந்த இடையில்...
என் உயிரும் உறவாட துடிக்கிறது
அவள் உடுத்தியிருக்கும் உடையில்...

பூவைத் தொட்டாலும்
புண்ணாகும் அவள் விரல்கள்...
பனித்துளிகளில் நடந்தாலும்
தடம் பதியாது அவள் கால்கள்...

அழகிற்கு உதாரணம்
தேவலோக கன்னிகைகள்....
ஆனால்,
இவள் அழகோ
தேவலோக கண்ணிகைகளுக்கே உதாரணம்...

தேவதைக் கூட்டமே
தேடினாலும்
கிடைக்கப்பெறாதது
அவள் அழகு...
அதுதான்
அவளின் அங்கீகாரம்...
அதுவே
அழகின் அடையாளம்...........

எழுதியவர் : அன்பரசு (23-Feb-16, 12:47 pm)
சேர்த்தது : அன்பரசு
Tanglish : azhakin adaiyaalam
பார்வை : 122

மேலே