சூரியச்சுவடுகள்

சூரியனே..
விழித்தெழுந்த கண்களின் சிணுங்களில்
தட்டில் அமரும் வடகத்தில்
மாலை நேர மேகத்தில்
கோடை கால தாகத்தில்
உழைத்துச் சிவந்த மேனியில்
நிழலைத் தேடும் இதயத்தில்
உருகும் பனியின் உஷ்ணத்தில்
காய்ந்து உதிர்ந்த இலைகளில்
கானல் நீரின் உண்மையில்
சூரியகாந்தியின் திசையினில்
இரவு நிலவின் புன்னகையில்
நீ விட்டுச் சென்ற சுவடுகள்
எட்டிப் பார்க்கின்றன.
அவற்றைக் கொய்து கோர்த்துக் கொள்கிறேன்..
கொஞ்சம் கவிதை செய்து கொள்ள..

எழுதியவர் : Vaanmadhi (23-Feb-16, 11:48 am)
சேர்த்தது : வான்மதி
பார்வை : 80

மேலே