நடந்தது குறுநகை திருக்குறள்

மல்லிகை கூந்தலில்
மார்கழித் திங்கள்
தென்றலில் இன்னும் குளிர்ச்சி !

கண்களில் நீலம்
கவிதையில் தமிழ்
நடந்தது நைல் நதி !

இதழ்களில் முல்லை
புன்னகையில் புதுமை
விரிந்தது மலர்த் தோட்டம் !

நடையினில் மென்மை
இடையினில் குறட் பா
நடந்தது குறுநகை திருக்குறள் !

மாலையில் வானம்
மௌனத்தில் அவள்
மலர்ந்தது ஒரு புதுமலர் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Feb-16, 10:23 am)
பார்வை : 101

மேலே