மித்ரா – புத்ரா

மித்ரா – புத்ரா
===============

முத்து: என்னடா ரண்டு பேரும் விவாதம் பண்ணிட்டிருக்கீங்க?

செல்வன்:
இல்லடா. எங்க ரண்டு பேரு மனைவிகளுக்கும் பெண் குழந்தைகங்க
பொறந்திருக்காங்க. நான். நா எம் பொண்ணுக்கு மித்ரா –ன்னு பேரு வைக்கப்போறேன்.

கண்ணன்: ஏண்டா முத்து அவம் பொண்ணுக்கு மித்ரா –ன்னு பேரு வைக்கற போது நா சும்மா
இருப்பேனா? நானுந்தாண்டா எம் பொண்ணுக்கு புத்ரா –ங்கற இந்திப் பேர வைக்கப்
போறேன்.

முத்து: ஏண்ட உங்க ரண்டு பேருக்கும் நம்ம தாய் மொழி, பெரும்பாலான
இந்தியர்களால் பேசப்படும் ஒரே செம்மொழி நம்ம தமிழ் மொழின்னு உங்களுக்குத்
தெரியாதா? ஏண்ட பிள்ளைகளுங்கு இந்த மாதிரி இந்திப் பேருங்கள வைக்க
ஆசைப்படறீங்க?

இருவரும்: என்னடா செய்யறது. தமிழை வளர்க்க பாடுபட வேண்டிய தமிழ் ஆசிரியர்கள்,
தமிழ்ப் பேராசிரியர்களில் பெரும்பாலோரே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப்
பேருங்களத் தானே வைக்கறாங்க. நாங்களெல்லாம் ஏதோ உருண்டு பொரண்டு
பத்தாம் வகுப்பு தேறினதே எங்களுக்குப் பெரிய சாதனை தான்.

முத்து; அதனால என்னடா. நீங்கெல்லாம் வீட்டிலேயும் மத்தவங்கிட்டேயும் தமிழ்லதாண்டா
பேசறீங்க. ஏன் இந்தில பேசறது தானே.

இருவரும்: அதெப்படி. நம்ம தாய் மொழிலே தான பேசணும்.

முத்து: அதே மாதிரி நாம் பெத்த பிள்ளைகங்களுக்கு நம்ம தாய் மொழிலே பேரு வச்சாத்
தான் மத்த மொழிகளப் பேசறவங்க நம்மள மதிப்பாங்க. நம்மள நாமே கேவலப்
படுத்திக் கூடாதடா. சரி நீங்க உங்க பொண்ணுங்களுக்கு வச்ச பேருங்களுக்கு
பொருள் (அர்த்தம்) என்னன்னு தெரியுமா?

இருவரும்: அட இந்திப் பேருக்கெல்லாம் எத்தனை பேரு அர்த்தம் தெரிஞ்சு பேரு
வைக்கறாங்க. இந்திப் பேரா இருக்கணும். அவ்வளவு தான். அர்த்தமெல்லாம்
யாருக்கு வேணும்..

முத்து: சரி நாஞ் சொல்லறேன். மித்ரா –ன்னா நண்பன் –னு அர்த்தம். இந்தப் பெயர்ச் சொல்
பாரசீக மொழி-சமஸ்க்ருத மொழி வழியாக தோன்றின சொல். இந்தப் பேர
ஆண் பிள்ளைக்கும் வைக்கலாம; பெண் பிள்ளைக்கும் வைக்கலாம். புத்ரா –ங்கற
பெயர்ச் சொல் சமஸ்கிருதச் சொல். அந்தச் சொல்லுக்கு மகன் –ன்னு அர்த்தம்.
அதே பொருளில் இந்தப் பெயர்ச் சொல்லை மலாய் மொழிலெயும் பயன்படுத்தறாங்க.

இருவரும்: தூங்கிட்டிருந்த எங்க தாய் மொழிப் பற்றைத் தட்டி எழுப்பிவிட்டதுக்கு ரொம்ப நன்றிடா
முத்து.

===========================================================

நன்றி: கூகுல் & இண்டியாசைல்ட்னேம்ஸ்காம் Name Mithra generally means Friend, is of Iranian (Persian), Indian origin, Name Mithra is a Unisexname, which means both Boy and Girl can have this name. This name is shared across persons, who are either Muslim or Hindu by religion. ਮਿਤ੍ਰਾ; મિત્રા; ; మిత్రా; ಮಿತ್ರಾ; মিত্রা; മിത്രാ; மித்ரா
Derived from an Indo-Iranian root *mitra meaning "oath, alliance, friend". In Persian mythology he was a god of light and friendship, the son of the supreme god Ahura Mazda. Worship of him eventually spread outside of Persia, where it was known as Mithraism.

पुत्र
Putra is the Sanskrit word for son. It has been absorbed into the Malay language

எழுதியவர் : மலர் (24-Feb-16, 10:51 pm)
பார்வை : 716

மேலே