ஆடுகளம் Somasundaram Pillai

‎‎
### ஆடுகளம். ###
~+~+~+~+~+~+~+~+~+~+~+
மனமகிழ் மாலை நேரம்.
ஆடிமகிழ அழைத்திட்டான்
அகிலன்.அவன் என் பேரன் .
ஓடி மகிழ உடலம் இசையாது
எனவே
அமர்ந்து ஆடும் ஆட்டம்
ஏதாகிலும் ..........என்றேன்.
"கயம்"அல்லது "செங்களம்"
"Carrom". " Chess"
என்றான்.
நான் "செங்களம்" என்றேன்.
எதுவாக இருந்தாலும்
வாகை சூடுவது
"Champion"
நானல்ல என்பதை நான் நன்கு அறிவேன்.
மேசையின் இருபுறமும்
"Table "
நாற்காலிகளில் அமர்ந்தோம்
"Chair "
"செங்களரி"விரித்தோம்.
" Chess board "
"மன்னர்"...வண்ணத்திற்கு
" King"
ஒருவராய் இருபுறமும்.
"பட்டத்தரசி"பக்கத்திற்கு
" Queen "
ஒருவராய்.
பீரங்கிப்படையிரண்டு
"Cannon/Rook"
புரவிப்படையிரண்டு;
"Horse "
யானைப்படையிரண்டாய்
"Elephant/Fort"
இருமருங்கிளும்.
கரியநிற காலாட்படை
(Pan/போர் வீரன்)
எட்டுப்பேர்
ஒருபுறமாய்
வெள்ளைநிற காலாட்படை
அறுவர் மட்டு்ம் தயார் நிலையில்...........
இருவர் எங்கே.?.
பிரச்சனை ஆரம்பமானது.
தாத்தா...எங்கே இருவர்.?.
என்றான் பேரன்.
இன்று உச்சப்பொழுதில்தான்
நானே இங்கு வந்தேன்.
நான்எப்படி அறிவேன் என்றேன்.
நான் நிலைமாடத்தில்தான்
(Cupboard)
வைத்தேன்.
காலாட்படையில்
இருவர் இல்லாமல்
எப்படி ஆடுவது.
இங்கேதான் எங்காவது
ஓடி ஔிந்திருப்பர்.
எப்பாடு பட்டாகிளும்
தேடிப்பிடித்து இழுத்து
வாருங்கள் என்றுகூறி
எழுந்து நடந்திட்டான்.
இரவு முழுதும் என் நிலைமை:
நிலைமாடம்....நிலைப்பேழை
(Cupboard). (Almirah)
நிலையடுக்கு....எழுத்து மேசை
(Rack). (Writing table)
இண்டு...இடுக்கு என
ஆன்மீக பக்தன் ஆலயத்தில்
உருளுவதுபோல்
உருண்டு புரண்டு
முட்டி மோதித்தான் பார்க்கிறேன்.
ஆனாலும் அகப்படவில்லை
அந்த காணாமல்ப்போன
காலாட்படை இருவரும்.
==============================
நன்றி: முகநூல் தமிழ்ப் பணி மன்றம் -

எழுதியவர் : Somasundaram Pillai (25-Feb-16, 10:25 pm)
பார்வை : 76

மேலே