தே வந்து நே காட்டும் - N Ganapathy Subramanian
தே வந்து நே காட்டும் !!!
******************************
ஓரெழுத்து சொற்களால் ஒரு முயற்சி
****************************************
மூ வந்து மை நீக்கி
தே வந்து நே காட்ட
சா வந்து வா என்ன
போ என்று புறந் தள்ளி
மீ நோக்கி தே உன்னி
கை பெற்று பூ பற்றி
நை அற்று பே அற்று
மெய் கண்டு நா உளற
பூ கொய்ய கா சென்ற
ஏ என்று எனைக் காட்டி
பா ஒன்று தா என்று
அருள் புரிந்த தே
மோ யாத பூ கொண்டு
நோ வாது பா செய்ய
சோ வந்து கோ வந்து
வை நின்று கை கூப்பும்
பொருள்
**********
மூப்பு வந்து குற்றம் தவிர்த்த காலை
தெய்வம் வந்து அருள் செய்ய
வந்து விடு என்று இயமன் அழைத்த போது
அவனை போ என்று புறம் தள்ளினான்.
ஆகாயத்தை நோக்கி இறைவனை எண்ணி
பூ கொண்ட கையினால் [பூசை செய்ய]
வருத்தம் தொலைத்து அச்சம் அற்று எல்லாம் பெற்று
படைப்பின் உண்மையை அறிந்த என் நாக்கு உளறல் செய்ய
பூசைக்கு மலர் கொய்ய காடு சென்ற என்னை
ஏய் என்று விரல் காட்டி அழைத்து
என்மேல் பாடல் ஒன்று நீ பாடு என்று
எனக்கு அருளாணை இட்டான் இறைவன்
முகர்ந்து பார்த்ததால் அசுத்தம் செய்யப்படாத மலர்கள் கொண்டு
எந்த நோயும் இன்றி நான் வாழ்ந்து அவன் மேல் பாடல்கள் இயற்ற
அன்னை உமையவள் வந்துவிட அரசனும் அங்கு வந்துவிட
வையகத்தில் உள்ளோர் அனைவரும் பக்தியுடன் எழுந்து நின்று
கை கூப்பித் தொழுவார் அந்த இறைவியையும் அரசனையும்.
----------------------------- அரைகுறை மாணவன்
—with Padmini Mini.
நன்றி: முகநூல் - N Ganapathy Subramanian to தமிழ்ப் பணி மன்றம்