குறும்பா வெள்ளம்-03

சீராய்ப் பெய்த மழை
சிந்திக்கவும் வைத்தது:
ஏரிக்குள் குடியிருப்பா?
குடியிருப்புக்குள் ஏரியா?
****
உடைத்து விட்டார்கள்
ஏரிக் கரைகளை..
உடைந்து போனதோ
உயர்வு தாழ்வுகள்!
வர்க்க பேதங்கள்!
சாதி மதங்கள்!
****
அன்றாடம் காய்ச்சியது
மழை
அன்றாடங்காய்ச்சிகளாய்
எம் நிலை!
****
மர உண்டியலை
உலுக்கியது காற்று
உதிர்ந்தன சருகுகள்!
****
பூனைப்படையுடன்
புறப்பட்டான் தலைவன்
பூத்தது நிலா!
****
சிந்திய அரிசியைச்
சுவைத்தது பசு
சிணுங்கியது
ஒருவயிறு!
****

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (26-Feb-16, 10:09 am)
பார்வை : 120

மேலே