கற்பனை மட்டும் நிஜமானால்

என்னவனே..!
திரைகளின் பின்னே
ஒளிந்து கொள்ளும் -பெண்
நிழலாய் வெட்கப்பட்டு
செல்லாத காசானது
எந்தன் சொல்லாத காதல்!

உன் கடைக்கண் பார்வையில்
விடை பெற்று போன என் மனம்
நாதியற்று தவிக்குதே
இருட்டுக்குள் குருட்டு
தவம் செய்தபடி!

என் அருகே நீயிருக்கும்
உன் மடியில் நான் துயிலும்
கனவுகள் கடை போடுதே..
உன் விரல் பிடித்து நடந்து
விரதங்கள் முடித்திடும்
கற்பனையில் நான் வாழ்கிறேன்!

நீ வந்து எ(ன்)னை சேரும்
அந்நாளின் வரவினை
வரவேற்க விழித்திருக்கிறேன்...
இரவுகளை எல்லாம்
பகலாக மாற்றி
என் வாசல் காத்திருக்கிறேன்!

கருப்பு வெள்ளை காட்சிகள்
யாவும் வண்ணமாகும்
நீ வந்து எ(ன்)னை சேர்ந்தால்,
காட்சிப் பிழைகள்
எல்லாமே நேராகும்
உன் விழியாக நானானால்!

உ(ன்)னை காதலித்து
கரம் பிடிக்கும்
பேராசைக்குள் ஆயிரம்
சின்ன சின்ன ஆசைகள்...
அத்தனை ஆசைக்கும்
முத்தாய்ப்பாய்,
உன் உருவில் ஆண் மகவும்
என் உருவாய் பெண் மகவும்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (26-Feb-16, 8:18 am)
பார்வை : 832

மேலே