காகே்பா»2

chennai university,chennai:
14/2/2006

பத்து வருடங்களுக்கு முன்னால் இதே இடத்தில் இருவரும் நின்றிருந்தார்கள்..

“எவ்ளோ தடவை சொன்னேன்,,எக்ஸாம்க்கு முன்னாடி நாள் படத்துக்குப் போகாத போகாதனு.பாரு..ஒரு பேப்பர் அவுட்.. ஏன்டா இப்படிப் பண்ற?”

“ஐயோ தெய்வமே,,ஆள விடு.. உனக்காகவே அடுத்த தடவை ஆல் கிளியர் பண்றேன்..ஓகே?”

“ப்ராமிஸ்?”

“சத்தியமா"

“வெரி குட்..அப்போ சரி..இங்கயே இரு..ரெண்டே நிமிஷம்.. படத்துக்கு போலாம்" இவன் கன்னத்தை செல்லமாய் அறைந்துவிட்டு துள்ளிக்குதித்து ஓடினாள்.

இன்று..

“உன்ன இன்னிக்கு இவ்ளோ நல்ல நிலைமைல பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் நினைச்சத விட பெரிய ஆளா வந்துட்ட.்.. ”

“தேங்க்ஸ்"

“உன்னோட படம் எல்லாம் நானும் அவரும் மிஸ் பண்ணாம பார்ப்போம்.. “ அவன் தன்னைத் திரும்பிப் பார்த்து சகஜமாய்சிரித்துப் பேச மாட்டானா என ஏங்கினாள். அவன் தலை நிமிரவில்லை.

“கேட்க சந்தோசமா இருக்கு.. அவர் என்ன பண்றார் இப்போ?”

“டெல்லி கவர்மெண்ட்ல ரெவென்யூ இன்ஸ்பெக்டர்.. “

“நைஸ்.. நீயும் நல்லா இருக்கிறதப் பார்க்க ரொம்ப சந்தோசப்படுறேன் முரா" என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை கவனித்தான். பத்து வருடங்களில் அவள் கொஞ்சம் வாடியிருந்தாள். நிறம் கொஞ்சம் குறைந்து போய், கண்களுக்கு கீழ் சில சுருக்கங்கள் தோன்றியிருந்தன.

அப்பொழுது அவன் கைப்பேசி ஒலித்தது. “முன்பே வா..என் அன்பே வா..பூப்பூவாய் பூப்பூவாய்..”பதறியடித்து பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து காதில் அனைத்துக்கொண்டான்.

“ஆமா ..மேல தான் இருக்கேன்.. இருக்கோம்.. ரெடியா?”போனில் பேசிக்கொண்டே இவளைப் பார்த்தான்.

அவளது பார்வை இவனைப் பார்த்து மாட்டிக்கொண்டாயடா என கேலிப்புன்னகை செய்தது.

அன்று..

“சில்லுனு ஒரு காதல்னு ஒரு படம் வந்திருக்கே பாத்தியா?”

“இல்ல.. நீ பாத்தியா?”

“ம்ம்ம்.. அப்டியே மயங்கிட்டேன்..சூர்யா பூமிகா லவ் எபிசோட் எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? அப்டியே நம்ம ரெண்டு பேர் மாதிரி.. “

“டேய்..இதான் சான்ஸ்னு உன்ன சூர்யானு சொல்லிக்கிற போல..”

“அய்யே..அப்போ நீ மட்டும் பூமிகாவா?”

“ஓ ..அப்போ நான் அழகா இல்ல..அப்டி தான? கெளம்பு,,கெளம்பு..வீட்டுக்குகெளம்பு..

“ஹேய் ..ஸாரி ஸாரி..நீ செம அழகு..பூமிகா எல்லாம் தள்ளி நிக்கணும்..ப்ளீஸ் ப்ளீஸ்..ஐ எம் ஸாரி" அவள் கையைப் பிடித்துக் கொண்டு இன்னும் நெருங்கி வந்தான்.

அவள் இவனையே முறைத்துப் பார்த்தாள். “அந்த பயம் இருக்கட்டும்"என்றாள் புருவத்தை உயர்த்தி ,அதே கொல்லும் புன்னகையோடு.

“அதுல முன்பே வானு ஒரு பாட்டு இருக்கு..அப்பப்பா..கேட்டுப் பாரேன்..”என்றான்.

“அதெல்லாம் அப்புறம் கேக்கலாம். இப்போ படிக்கலாம்"

“அட..ஜஸ்ட் அஞ்சே நிமிஷம்..ரெண்டு மணி நேரமா படிச்சிட்டு தானே இருக்கோம். அதிகமா படிச்சா கேன்சர் வருதாம்..ரிசர்ச் பண்ணிருக்காங்க..இத மட்டும் கேட்டுட்டுப் படிப்போம்..ஒகே?”

“கடவுளே..ஓகே..இயர்போன் எடு..” சலித்துக்கொண்டாள்.ஆளுக்கொரு இயர்ப்ளக் மாட்டிக்கொண்டு பாட்டைக் கேட்டனர். ஐந்து நிமிடங்களுக்குப் பின்..“வாவ்..செம சாங் .. இத எனக்கு ப்ளூடூத்ல அனுப்பு" இயர்போனைசுருட்டினாள்.

“நான் சொன்னா கரெக்டா இருக்கும். உனக்குப் பிடிக்கும்னு அப்போவே தெரியும். முன்பே வா,என் அன்பே வா,,பூப்பூவாய் பூப்பூவாய்"

“ஹேய் ..ரெண்டு முக்கியமான விஷயம் நீ பண்ணனும் இப்போ"

“என்ன?” ஆர்வமாய் அருகில் வந்தான்.

“ஒன்னு தயவு செஞ்சு பாடாத. கேக்க சகிக்கல.ரெண்டு படிக்க ஆரம்பி..டைம் ஆகுது"

“ஹ்ம்ம்..கஷ்டம்" வெறுப்புடன்புத்தகத்தில் மீண்டும் கண் பதித்தான்.

்தொடருடம்...்

எழுதியவர் : satheesh (27-Feb-16, 10:07 am)
பார்வை : 176

மேலே