நீ வரும் வரை-20 சுபம்
நீ வரும் வரை-20
திருமணம் சொர்க்கத்தில்
நிட்சயிக்கபடுகிறதாம்...
நானோ என் சொர்கத்தை
அடையவே உன்னை
நிட்சயம் செய்து கொண்டேன்...
வா இருவரும் கை கோர்த்து
நடக்கலாம், நம் வாழ்க்கை பயணத்தில்!!!....
(முன்கதை சுருக்கம்- பிரியாவும், ரவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்கள் காதலில் வெற்றியை பெற அடுத்தது அவர்களை திருமணத்திலும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பாலா தனது அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்)
பாலா, ரவி, பிரியா என மூவரும் தீட்டிய திட்டத்தை இரு நாள்களுக்கு பிறகு பிரியாவின் உடல்நிலை முழுவதுமாக சரி ஆனபின் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்தனர்...அது வரை இதை பற்றி பிரியாவின் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டாம் என்று முடிவாகி பிரியாவும் தன் வீட்டிற்கு பழையபடியே சென்றாள்....அவளது உடல்நிலை அவ்வளவு மோசம் இல்லை என்பதால் வீட்டை சமாளிப்பதில் அவளுக்கு சிரமம் ஒன்றும் பெரிதாய் ஏற்படவில்லை....
ரவியும் பிரியாவும் இந்த இடைவெளியில் போனில் நிறைய பேசிக்கொண்டனர், அது மட்டும் அல்ல... இவர்கள் இருவருமாக பாலாக்கே தெரியாமல் வேறு ஒரு திட்டத்தை தீட்டி அதை விரைவிலேயே செயல்படுத்தி வென்றியும் கண்டுவிட்டனர்...அது நிச்சயமாக பாலாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...பிரியாவின் உடல்நிலை முழுவதுமாக சரி ஆகிவிட்டது...
பாலா தான் போட்டு வைத்த திட்டத்தை நிகழ்த்தவேண்டிய நேரமும் வந்தது...அன்று பார்த்து, பிரியா தன் தோழிகளை பார்க்க போவதாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்...இதுவும் அவர்களின் திட்டத்தில் ஒன்று தான்...
பாலாவோ தன் வீட்டுக்கு கால் செய்து அவனது அம்மாவையும், அப்பாவையும் பிரியாவின் வீட்டுக்கு வரும்படி அதிரடியாக கூறிவிட்டு போனை கட் செய்தான்...அவர்களும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லையே என பதறியபடி பிரியாவின் வீட்டிற்கு வர கிளம்பினர்...
பிரியாவின் வீட்டுக்கு சென்ற பாலா தன் கால் செருப்பை கூட கழட்டாமல் பயங்கர கோவத்தோடு " பிரியா.... பிரியா".... என்று கத்திகொண்டே உள்ளே நுழைந்தான்....எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் பாலாவே இப்படி வீடே அதிரும்படி கத்தினால் நிச்சயமாக ஏதோ ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்க வேண்டும் என்று பிரியாவின் குடும்பத்திற்கு புரிந்து விட்டது...
"என்ன மாப்ள, என்ன ஆச்சு...எதுக்காக இப்படி கோவமா பிரியாவ கூப்டுட்டு இருகிங்க" என்று பிரியாவின் அப்பா சோமநாதன் கேட்கவும் பாலாவின் கோவம் மேலும் அதிகரித்ததை போல் "என்ன ஆச்சா, உங்க பொண்ணு செஞ்ச காரியத்துக்கு என்ன ஆச்சுனா கேட்கறிங்க...அவள சொல்லி என்ன பிரோஜனம், வளர்த்த விதம் அப்படி....எங்கனாலும் சுத்து, என்னானாலும் பண்ணு..கடைசியா உனக்கு ஒரு இளிச்சவாயனா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிடறோம்னு சொல்லி வழியனுப்பி வச்சா எப்படி இருக்கும்? இப்படி தான் ஒழுங்கங்கெட்டு ஊர் ஊரா சுத்திட்டு இருப்பா, இது மட்டும்னா இல்ல எவனுக்கோ பொறக்க போற குழந்தைக்கும் என் இனிஷியலை வைக்க பிளான் பண்ணிருக்கிங்கலானு யாருக்கு தெரியும்" ...என்று பாலா பிரியாவை பற்றி தப்பு தப்பாக பேச பிரியாவின் அப்பாவிற்கோ கோவம் ஜிவ்வென்று தலைக்கு ஏறியது...(அதற்கு தானே இப்படியெல்லாம் பேசினான்)
"யார பாத்து என்ன வார்த்த பேசற, வார்த்தைய அளந்து பேசு, ஏதோ இந்த வீட்டு மருமகனாச்சேனு அமைதியா இருந்தா எடுத்த எடுப்பலேயே என் பொண்ண பத்தி தப்பா பேசுறயா...இதுக்கு மேல இப்படி பேசினா வெட்டி போட்ருவேன்" என்று தந்தைக்கு உரிய கோவத்தோடு கொதித்து போய் சோமநாதன் பேச அந்நேரம் பார்த்து பாலாவின் குடும்பமும் அங்கு ஆஜரானது...
"என்ன என் பையனையே வெட்டி போட்ருவேணு சொல்றிங்களா, உங்க வீட்ல மாப்பிளைக்கு இப்படி தான் மரியாத குடுப்பிங்களா..நல்லா இருக்கு உங்க மரியாத.... ஏதோ நல்ல குடும்பம், மானம், மரியாத, கௌரவம்னு இருக்குமேன்னு உங்க பொண்ண எங்க வீட்டு மருமகளாக்க நினச்சா நீங்க என் பையனையே அசிங்கபடுத்தரிங்களா" என்று அங்கு என்ன நடந்தது, பாலா என்ன பேசினான்...எதற்கு பிரியாவின் அப்பா இப்படி கொதித்து போய் பேசுகிறார் என்பதைபற்றி எல்லாம் கவலை படாமல் தன் பையனை எப்படி இப்படி அவமரியாதையாக பேசலாம் என்று பாலாவின் அப்பா ரவீந்தரன் சோமனாதனிடம் சண்டைக்கு சென்றார்...
அந்த நேரம் பார்த்து பிரியாவின் அண்ணன்கள் வர சண்டை பூதாகரமாய் வெடித்தது...இரு வீட்டுக்கும் இடையில் கைகலப்பு நடக்கும் அளவுக்கு வந்துவிட்டது...இறுதியாக அங்கு இருந்த பிரியாவின் சொந்தக்காரன் ஒருவன் மட்டும் உஷாராகிபோய் "இப்போ என்ன பிரச்சன, எதுக்கு இப்படி அடிச்சிகிறிங்க? என்ன ஏதுன்னு விசாரிப்போம் அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க" என்று இரு குடும்பத்தையும் சமாதானம் செய்து அமைதியாக்கினான்...
இவர்கள் அமைதியானால் நம் திட்டம் அரோகரா தான் என்று பாலா மீண்டும் அவர்களை கோவபடுத்துவதை போல் "உங்க பொண்ணு காலேட்ஜ் படிக்கும்போதே ஒருத்தன லவ் பண்ணி ஊர் ஊரா சுத்திருக்கா, அத மறச்சி இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க பாக்கறா...இப்படி பொண்ணு வளத்துருக்க லட்சணத்துக்கு என்மேல கோவப்பட உங்களுக்கு வெட்கமா இல்ல" என்று பாலா ஆவேசமாக கத்த, "மறுபடியும் என் பொண்ண பத்தி பேசன உனக்கு மரியாத இருக்காது" என்று சோமநாதனும் ஆவேசமானார்...
"இப்படி கத்தினா நான் பயந்துடுவேனா, என்ன, இப்படி கத்தி இந்த பிரச்சனைய முடிக்க பாக்கறிங்களா...இதுக்குமேலயும் இந்த கல்யாணம் நடக்கும்னு கனவு காணாதிங்க..நீங்க என் கால்ல விழுந்தா கூட இந்த கல்யாணம் நடக்காது" என்று ஹைபிட்சில் பாலா வெடிக்க அதற்கு பதில் கொடுப்பதை போல் "கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி சந்தேகபடர சந்தேக பேய்க்கு எங்க தங்கச்சிய கட்டிகுடுப்போம்னு நீ கனவு காணாத..." என்று பிரியாவின் அண்ணன் கூற "அப்பாடா நாம நினச்சது நடக்க ஆரம்பிச்சிடுச்சு" என்று அடுத்த பாலை போட்டு சிக்ஸர் அடிக்க பார்த்தான் பாலா...
"என்ன உங்க பொண்ண நான் கட்டிக்க கனவு காண்ரேனா, இங்க பாருங்க உங்க பொண்ணுக்கு என் கூட இல்ல எவன்கூடவும் கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன், என்ன ஏமாத்தி அசிங்கபடுத்துன உங்க பொண்ணு கல்யாணம் இந்த ஜென்மத்துல நடக்காது" என்று பாலா அழுத்தமாக கூற " அத சொல்றதுக்கு நீ யாருடா, என் தங்கச்சி கல்யாணத்த குறிச்ச முகர்த்ததுல நாங்க நடத்தி காட்டறோம், அத பாத்துட்டு அட்சதைய போட்டுட்டு போய்கிட்டே இரு" என்று பாலா சிக்ஸர் அடிக்க கட்சிதமாக உதவிய பிரியாவின் அண்ணனை கட்டிபிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது பாலாவுக்கு...
இப்படி நடந்து கொண்டிருந்த சண்டைக்கு நடுவில் பிரியா அதிரடியாக நுழைய பாலாவுக்கோ மயக்கமே வருவதை போல இருந்தது...இப்படி பிரியாவின் பேரை வைத்து சண்டை போடும்போது பிரியா அங்கு இருந்தால் அவளுக்கு பிரச்சனை வரலாம், அவளுக்கு அடிகூட விழலாம் என்று தான் தங்கள் திட்டப்படி பிரியா அங்கு இருக்ககூடாது என்று முடிவானது, ஆனால் பிரியா இப்பொழுது எதற்காக இங்கு வந்தாள் என்று குழம்பியபடி பாலா நிற்க....
பிரியாவோ சாவுகாசமாக அவர்கள் அருகில் வந்து நின்றாள்..பிரியாவின் அம்மாவோ அங்கு நடந்ததை விளக்கி "உன் மேல இப்படி ஒரு பழிய போடறாங்க" என்று கோவமும், அழுகையும் கலந்த குரலில் கூற "அப்படியா, நான் காதலிச்சேன்னு சொல்றாங்களா, சரி நான் அத ஒத்துக்கறேன்"...என்று பிரியா கூறுவதை கேட்டதும் பகீர் என்றிருந்தது அவளின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும்..."நான் காதலிச்சது தப்புனா அப்போ அதே தப்ப இங்க நிக்கிறாரே பாலா அவர் செஞ்சுருக்காரே, அது மட்டும் நியாயமா" என்று அவள் கேட்க பாலா ஒன்றும் புரியாமல் திகைத்து போனான்...
"தீபா"...என்று பிரியாஅழைக்க அவர்கள் முன் வந்து நின்றவளை பார்த்து பாலா கண்கள் ஆனந்தத்திலும் அதிர்ச்சியிலும் சிவந்து போனது..."இவ தான் இவரோட முன்னாள் காதலி, இதுக்கு மேல இவரோட மனைவியாகவும் ஆக போறா" என்று அடுத்த அம்பை எடுத்து பிரியா வீச பாலாவின் கண்கள் தீபாவை நோக்கியது, தீபாவோ கண்களாலேயே " பாலா இப்போ உன்ன புரிஞ்சிக்கிட்டேன் என்ன மனிச்சிடு, ஐ லவ் யு" என்று ஜாடை காட்ட பாலாவின் இதயத்தில் ஆயிரம் மலர்கள் ஒரே நேரத்தில் பூத்ததை போல் அப்படி ஒரு பரவசம்..
இதற்கு மேல் என்ன நடக்கும், அவர்கள் திட்டப்படி இருகுடும்பத்துக்கும் இடையே சண்டை பெரிதாகி, பிரியாவுக்கு அதே முகூர்த்தத்தில் அவள் காதலனோடு அதான் நம்ப ரவியோடு திருமணம் நடக்கும் என்று பிரியாவின் குடும்பத்தாலும், பாலாவுக்கு தீபாவோடு கல்யாணம் நடக்கும் அதுவும் அதே முகூர்த்தத்தில் என்று பாலாவின் குடும்பத்தாலும் கோவத்திலும், வறட்டு கௌரவத்திலும் முடிவு எடுக்கப்பட்டது.... இதுவரை பெற்றவர்களின் வறட்டு கௌரவம் பிள்ளைகளின் காதலை பிரித்து வைத்திருக்கிறது, ஆனால் இவர்கள் கதையிலோ அவர்கள் முட்டாள் தனமான கோவமும், கண்மூடிதனமானா வறட்டு கௌரவமும் தான் இவர்களின் கல்யாணத்தையே பேஷாக நடத்த போகிறது...
எல்லா பிரச்சனைகளும் முடிய திருமண வேலையை இரு குடும்பங்களும் பரபரப்பாக செய்து கொண்டிருந்தது..ரவி, தீபா குடும்பத்தையும் சமதானம் செய்துவிட்டனர்...ஒரே நாளில் ஒரே முகூர்த்தத்தில் இரு கல்யாணங்களும் நடக்க வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிட்ட கீது, ரேணு,மாது,சீனு, தினேஷ் என்று இருவரின் நண்பர்களும் கலந்து கொண்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்....
இப்படி இரு ஜோடிகளும் திட்டம் போட்டு கொண்டு கல்யாணத்தையும் நினைத்தபடி முடித்துவிட்டு சுவிட்சர்லாந்த்க்கு ஹனிமூன் செல்ல அவர்கள் குடும்பமோ இன்றும் முகத்தை திருப்பியபடி முட்டி மோதிக்கொண்டு தங்கள் பிள்ளைகளின் திட்டம் தான் இது என்று தெரியாமல் சண்டையிட்டு கொள்வது வேடிக்கையாக தான் இருக்கிறது..
ஆனால் இதை பற்றி எல்லாம் கவலையே இல்லாமல் பிரியா ரவியோடும், பாலா தீபாவோடும் தங்கள் ஹனிமூனை கொண்டாடி கொண்டிருந்தனர்....ஒரு கல்யாணத்த பண்ண ஆயிரம் பொய் கூட சொல்லலாம் என்று மருவி வந்த பழமொழியை கையில் வைத்து கொண்டு இவர்களோ உண்மையை கூறியே இரு கல்யாணத்தையும் முடித்துவிட்டனர்...
இந்த இரு ஜோடிக்கும் கல்யாண வாழ்த்தை கூறி அவர்களிடமிருந்தது விடைபெற்று கொள்வோம்....ஹாப்பி மேரீட் லைப் ப்ரியா, ரவி, பாலா, தீபா....நாங்க அடுத்த காதல் ஜோடிய பாக்க போறோம்,டாட்டா, பாய். பாய்.......
சுபம்.....