சலாவு 55 கவிதைகள்
அன்பே ,
உன் விளங்கமுடியா இரவுகளில் ..
விடை தேடும் விடியல் நான்..
ஒருமுறை அல்ல ..
மறுமுறை அல்ல..
பலமுறை ..
என்னை விட்டு .
விலக நினைத்தாலும் ..
உன் நிழலாக தொடரும் ..
என் நினைவுகள் ..
உன்னை விட்டு விலகாது ..
உன் விழி தீண்டி வந்ததாக ..
நீ நினைக்கும் நம் காதல் ..
நாம் இவ்வுலகிற்கு வரும் முன்னே ..
உயிர் தீண்டி அல்லவோ உருவானது ..
மெய்யுரைத்தேன் ..
மெய் காதல் ஒன்றினை ..
உன் உள்ளமோ ..
பொய்யுரைத்து ..
இல்லை என்றது ..
உன் மௌனம் என்னை ..
கொள்வதேனோ ..
இவ்வுலகில் காதலித்தால் ..
சாபம் தானோ ..
உயிர் பிரியும் வேதனை உணர்ந்தேன் ..
பெண்ணே,
உன்னை விட்டு பிரியும் பொழுது ..
...........................
......................................சலா,