கண்ணுக்குள் நான்

உதவிக் கரம்
வேறெங்கும் தேடவேண்டாம்
தன் கையே தனக்குதவி!

காதலியின் கண்களைப் பார்த்தேன்,
கண்ணுக்குள் நான்!
பாக்கியசாலி.

சர்க்கரை போடவில்லை,
ஆனாலும், தேநீர் இனிக்கிறது..
என் இளம் மனைவி போட்டது!

ஒரு எறும்பை நான் கொல்வதை
கவனிக்கும் என் குழந்தைகள்
தவறை உணர்கிறேன் !

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-16, 1:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : kannukkul naan
பார்வை : 2874

மேலே