நெறி மாறா

குறியிலா வாழ்வும் நெறியிலா வினையும்
தூவும் துயர்தனையே தூவும்
மாசிலா மனது பேசிடும் பொழுதும்
வீசிடும் மணமே வீசிடும்
காசிலா பொழுதும் வழுவா நிலையால்
கலைந்திடும் இன்னல் தொலைந்திடும்
நேசிலா நெஞ்சோ பாவம் தைத்தே
படும் வலியால் சுடும்.

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (29-Feb-16, 2:53 pm)
Tanglish : neri maaraa
பார்வை : 83

மேலே