டாஸ்மார்க்

பாரு பாரு ! நல்லா பாரு !
பட்டி தொட்டி எல்லாம் பாரு !
பாரு வசதி உண்டுன்னு போர்ட பாரு !
பள்ளி மாணவர்கள் கூட்டதையும் அங்கே பாரு !

சீருடையில் போகிறான் !
சில்லு பீரும் வாங்கறான் !
சிரிச்சிகிட்டே சீரழிந்து போகிறான் !
கடக்காரன் சீக்கிரமா கல்லாகட்ட பாக்கறான் !

கட்டடித்து வருகிறான் !
பிட்டடித்து பழகறான் !
கவலையின்றி வயறு நிறைய குடிக்கிறான் !
கடைசியிலே' கல்லீரல் பழுதுபட்டு கிடக்கிறான் !

டார்கெட்டும் வச்சிகிட்டு ;
டாஸ்மார்க்க தெறக்குது ;
அரசாங்கம் அதுலதானே நடக்குது !
அத எதிர்த்தவன அள்ளி ஜெயிலில் போடுது !

எழுதியவர் : hajamohinudeen (1-Mar-16, 7:13 pm)
பார்வை : 75

மேலே