இரவும் இன்னொரு பகலே

ஆளில்லாத இரவில்
நானும்
அவளும்
நிலவும்......
அருகிலிருந்தும்
அவள் கரம் கூடப் பற்ற முடியவில்லை....
காரணம், அவளிருந்தது
நிலவொளியிலில்லை
என் நினைவொலியில்...
லேசாக நிலவை பார்த்து சிரித்தேன்
நான்
என்னை
அவளிடம் தொலைத்துவிட்டு
சிரித்தேன்..
நிலவும் சிரித்தது ..
காரணம் தெரியவில்லை
ஒரு மெல்லிய காற்று எனை
வருடி சென்றது
குயில்கள் காதல் கானம்
பாட
வண்ணத்ததுப்பூச்சியோ மலரோடு கொஞ்சி விளையாட
இலைகளுக்கும் காதல் வந்துவிட்டது
காற்றில் அசைத்தாடியது.
இப்போது நிலவைப் பார்த்தேன்
அழுதுகொண்டிருந்தது.
தனியாக
சந்தேகமே இல்லை
இரவும் இன்னொரு பகலே.....
- அரவிந்த்