எனக்குள் தோன்றிய உணர்வை உன்னிடம் சொல்லவில்லை 555

என்னவளே...

நீ இன்று என்மீது கோபம் கொண்டு
சென்றது சரிதான்...

ஒருநிமிடம் எனக்குள்
தோன்றிய அந்த உணர்வை...

நான் உன்னிடம் சொல்லாமல்
இருந்தது என் தவறுதான்...

நீயும் நானும் பழகியதை வைத்து
நான் உன்னை காதலிக்கவில்லை...

உன்னை நான் முதன்முதலில்
பார்த்த அந்த வினாடியே...

உன்னை நான் எனக்குள்
நினைத்துவிட்டேன் என்னவளாக...

நீயும் நானும் பழகிய அந்த உறவு
நட்பா காதலா தெரியாமலே நான்...

நான் உன்னை காதலித்தேன் என்று
அந்த காகிதம் உன்னிடம் காட்டிகொடுத்தது...

நானா என்றோ கிறுக்கிய
கிறுக்கல்கள் அந்த காகிதம்...

உன்னை நான்
முதன்முதலில் பார்த்த...

அந்த பேருந்து நிலையத்திற்கு தெரியும்
அந்த நிமிடம் எனக்குள் வந்த காதலை...

ஏனோ இன்றுவரை அந்த காதலை
உன்னிடம் சொல்ல...

எனக்கு தோன்றவில்லை
தெரியவுமில்லை...

எப்போதும்போல் என்னுடன்
நீ கைகோர்த்து வா...

எந்த உறவகா இருந்தாலும் நாம்
முதலில் இருந்து தொடங்குவோம்...

இன்னும் அதிக அன்போடு
சந்தோசமாக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Mar-16, 8:19 pm)
பார்வை : 189

மேலே