காதல்
பொழுது எனக்கு
போகவில்லை!
விழுது இன்னும்
வீழவில்லை!
அழுது என்மனம்
ஆறவில்லை!
என்
கண்ணீர் எழுதிய
கவிதை மட்டும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது!-ஆம்
அவளிடம்
சிறைபட்ட வார்த்தைகள்
'சீர்' தா! - என்கிறது
அகப்பட்ட வார்த்தைகள் என்னவளின்
'அணி' தா - என்கிறது!
விடுபட்ட வார்த்தைகள்
வெண்பா என்கிறது!
மொத்தத்தில்
இலக்கியம்
இனிதா - என்ற கேள்வியில்
அழகன் அவ்வைக்கு அளித்த
கனிதா! என்ற பதிலை
எதிர்நோக்கி.....