கலைந்த கனவே

காதலின் சாட்சி கருவிலேயே கரைந்தது.
காலனின் ஆசியால் எனக்கு உயிர் பிறந்தது.
சுயநலமாய் இருந்து விட்டேன்,வெண்சுடரே உனைஅழித்து.
வளர்பிறையே உனைக்கொன்று அடிவயிற்றில் நான் மறைத்து.
உயிர்தந்த உயிர் இன்று உதிரமென உதிர்ந்தது.
வயிற்றுக்குள் வளர்ந்த கார்மேகம் கலைந்தது.
கலைந்தது கருவல்ல என் உயிரே...
கலந்த நம் இதயத்தின் இன்னுயிரே..
நம் இன்பத்தின் அச்சாணி உடைந்ததடா இன்று.
துன்பத்தின் உச்சத்தில் இதயம்வலி கொண்டு,
துடிப்பதை யாரிடம் சொல்லி அழுவேன்.நான்
மரணத்தின் மடியிலே என்று விழுவேன்?

எழுதியவர் : கு.தமயந்தி (2-Mar-16, 6:50 pm)
சேர்த்தது : குதமயந்தி
Tanglish : kalaintha kanave
பார்வை : 93

மேலே