தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து26---ப்ரியா

ரியா முன்னால் தினமும் வசந்தின் மிருகத்தனமான செயல்களை கவலையுடன் பொறுத்து வந்தாள்..... ஆனால் இப்போது வழக்கத்தை விட மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே வெளிப்படுத்திக்காட்டிக்கொள்வாள், அவளது இந்த சிரித்த முகம் வசந்தை மிகவும் கோவப்படுத்தியது.......,

என்ன இவள் நாம் என்ன முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும் இப்படி புன்னகையுடன் உலவுகிறாளே திமிரோ? என்று புரியாமல் இவனும் நடமாடி வந்தான்.

அளவுக்கு மீறி அவன் மேல் உரிமை எடுத்துக்கொண்டாள் அவன் விருப்பமின்றி கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தாள் அங்கு நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாள் இவன் ஒருநாள் இல்லையென்றாலும் அதிகாரம் எடுத்து நடத்தி வந்தாள் நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் இவளுக்கு பயந்து பவ்யமாக தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்தனர்.....!

இணையத்திலும் கார் வடிவமைப்பு பற்றிய பல விஷயங்களைப்பற்றி தெரிந்து கொண்டாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது வடிவமைப்பு பற்றிய ஆராய்ச்சியை கூட்டிக்கொண்டே இருந்தாள், தூக்கம் சாப்பாடு என அனைத்தையும் மறந்து தனது வடிமைப்பிலேயே குறியாய் இருந்தாள் ரியா.

இவள் என்ன பண்கிறாள்? ஏது செய்கிறாள்? எதுவுமே வசந்த்க்கு தெரியாது...?? தனது தோழி கீதுவிடமிருந்து சில புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தாள் ஏற்கனவே இவளும் அந்த துறை என்பதால் சில விஷயங்கள் பிடிபட்டது அதன்படி பல புத்தகங்களையும் இவனது குறிப்புளையும் திருட்டுதனமாக எடுத்து படித்து செயல்படுத்த ஆரம்பித்தாள் பெரிய பேப்பரில் ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தாள் இன்னும் சில பேப்பரில் மனதிற்கு தோன்றிய அமைப்பையும் குறிப்புகளையும் குறித்து வைத்திருந்தாள்.......!

எல்லாம் பெர்பெக்டாக செய்து விட்டாள் ஆனால் இதை எப்படி சரியானது,உண்மையானது, நல்லபுதுமாடல் என்று உறுதிப்படுத்துவது வெளியில் யாரிடமும் கேட்க முடியாது அதன் பிறகு இதையும் பிரதீக் மாதிரி யாராவது அபகரித்து விடுவார்கள் இவ்வளவு நாள் நாம் கஷ்டப்பட்டு செய்த உழைப்பு எல்லாமே வீணாகிவிடும் என்ன பண்ணலாம் என்று யோசித்த ரியாவுக்கு ஒரு வழிகிடைக்க அந்த வெளிநாட்டு நிறுவரின் ஆபிஸ் முகவரியை அவனது ரூமில் தேட ஆரம்பித்தாள் அப்பொழுது அவனது வருகை கண்டு அப்படியே தாறுமாறாக அனைத்தையம் போட்டு விட்டு இவளது ரூமில் வந்து அந்த வரைபடங்களையும் குறிப்புகளையும் எடுத்து மறைத்து வந்தாள்.

உள்ளே வந்தான் வசந்த்........இவளது திருட்டு முழியை பார்த்தவன் எதுவும் புரியாமல் அவன் அறைக்கு சென்றான் அங்கு இவனது பொருட்கள் கலைந்து கிடப்பதை பார்த்ததும் அவனுக்கு சிறு சந்தேகம் வந்தது.....!

ஓடி வந்து அவள் தலைமுடியை பிடித்து என்னடி நடக்குது என்ன பண்றா என்று மிரட்டி அதட்டிக்கேட்டான்,ஏற்கனவே நான் ரொம்ப அடிவாங்கி நிற்கிறேன் அனைத்தையும் இழக்க வைத்தாய் இப்பொழுது மறுபடியும் என்னை நடுத்தெருவில் நிற்க வைக்க பிளேன் பண்றியா? சொல்லுடி என்று மிரட்டினான்..... அவள் பதில் சொல்லாமல் அப்படியே நின்றாள் அவள் இப்படி இருப்பது மேலும் அவனை பொறுமையற்றவனாய் மாற்றியது அடிக்க சென்றவன்..........
அவசரமா வெளில போகவேண்டி இருக்குது போயிட்டு வாரேன் வந்து கவனிச்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்....!

பல கம்பெனி முதலாளிகள் அதுவும் இளையதலைமுறையினர் சேர்ந்து ஒரு கூட்டுறவை ஏற்படுத்த தமிழ்நாட்டில் மொத்தம் 7நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன,அதில் வசந்தும் ஒருவனாய் கலந்து கொண்டான் அங்கு சென்ற இடத்தில் அவன் பிரதீக்கை பார்க்க நேர்ந்தது உடனே எழுந்து சென்று அவன் சட்டையைப்பிடித்து கத்தணும் போல் இருந்தது வசந்த்க்கு.........ஆனால் முக்கிய இடம் நமது பெயரும் கெட்டிரும் என்ற எண்ணத்திற்காக அமைதியாய் இருந்தான்....!...?

அங்கு வந்த தலைமை அதிபர்.......லண்டன் கம்பெனி ஒரு ப்ராஜெக்ட் கொடுத்துள்ளது இன்னும் 20நாட்களில் அதை முடித்துக்கொடுக்கும் நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலும் நம்பர்1 என்ற முத்திரைக்கொடுக்கும் லண்டன் நிறுவனம் அதற்காகதான் பார்த்து பார்த்து திறமையான 7நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம்.......அதனால எப்படி எப்படி என்று ரூல்ஸ் எல்லாம் சொல்றோம் கேட்டு உங்க திறமைய காட்டுங்க என்று அங்கு பேச்சு நடந்துகொண்டிருக்க, பிரதீக்கை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்....?????

கீது திருமணத்திற்கு எப்படியாவது செல்ல வேண்டும் அதற்குள் தொழிலில் வசந்த் அவன் ஆசைப்படி பிரபலம் ஆகவேண்டும் ஊரறிய என்னையும் திருமணம் செய்து கீதுவின் திருமணத்தின் போது கலக்கலாய் போய் நிற்கவேண்டும் நடக்குமா? கண்டிப்பா முயற்சி எடுத்தால் நடக்கும் என்று நம்பிக்கைக்கொண்டாள் ரியா.

இன்னும் 18நாட்களில் கீதுவின் திருமணம்............

அந்த சமயம் கீது கால்பண்ணி....வந்தனா வந்திருப்பதாகவும் நீ உடனே கிளம்பி வா வந்ததும் போயிடலாம் அவ என் வீட்டுலதான் இருக்கிறா இப்போ உடனே கிளம்பி வா என்று அவசரஅவசரமாக சொன்னாள்........???????

எழுதியவர் : ப்ரியா (4-Mar-16, 12:10 pm)
பார்வை : 358

மேலே