முடியும் முடிவிலி.

உனக்கே உன்னுள் அடையாளம் வேண்டுமா??

செய்ததை சொல்கிறேன்,
முடியும் முடிவிலி..

பேச்சிலந்து போ!
பைத்தியம் பிடி!
இரவையும் பகலென நினை!
அச்சம் கொள்!
அகிம்சையை மற!
காரணமின்றி கண்மூடி கிட!

உள்ளுள் நீயே உறுமி உறுமி உன்னையாய் நீ உருமாற்றி கொள்!

உள்ளத்தோடு கதறி, கத்தி கண்டபடி கையாடல் செய்து, அழுது பிழம்பு!
கண்ணை மூடி வெறிகொண்டு கிழித்தெறி!

உள்ளம் காட்டும்
உனக்குள் யார் நீ!!!!

பின் மயான அமைதியில்
கசியும் சந்தோஷ கண்ணீர் சொல்லும்...
சிவனோ, எமனோ எல்லாம் நீயே!

இதுவே முதல்படி....


நீ என்ன செய்ய இருக்கிறாய்.
ஏதோ ஓர் தேடலை தேர்வு செய்.
அதை மட்டும் தேடு...

அதை தேடுவதில் தடைவரின் அனைத்தையும் தேடு...

நீ நீயாக நடந்துகொள்,
தவறேதும் செய்தாயா?
தப்பேதும் இல்லை.
யாவரும் செய்வதே...

தவறோடு கொஞ்சம் புண்ணியம் சேர்த்தி வை.
செத்து ஓய்ந்ததும் சித்திரன் சரிபார்ப்பான்..

எல்லாம் எதற்கு? செய்திடவே, செய்து பார்...

இச்சைகள் அனைத்தையும் மிட்சமின்றி தீர்த்திடு.
அதுசமயம் பெற்றவர் மேலே காதலும் வைத்திடு.....

உறவெல்லாம் உனைபார்த்து சிரித்தாலும், கடித்தாலும்,
சிந்தனை செய்யாதே,
புது சித்தர்கள் நாமெல்லாம்.....

கவிதைகள் குமட்டி வாய்வழி வந்தாலும்..
வார்த்திடு அனைத்தையும்,
தாகம் தீர்ந்து,
தாள் நனையட்டும்....

மேகமாய் மாறு,
உலகெங்கும் சுற்று,
பொய்யே ஆனாலும்
மெய் மட்டும் பேசு...

பாஷைகள் மாறும் பயப்படாமல் எதிர்கொள்...
எதற்கும் தயாராக இருப்பவனுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம் வரும்...

கிடைத்ததை எல்லாம் நிரந்தரம் என நினைக்காதே,
நடப்பவை எல்லாம் நல்லதென்றும் நினைக்காதே...

சிரிப்பை மட்டும் அழுகையிலும் திறந்து வை..

எல்லா இடைஞ்சலும் கசக்கி பிழியும் உன்னை,
வலைந்து, குழைய வடிவமைத்து கொள்...

புதிதாய் புதிதாய் பெயரா இடம்பெயிர்..
அனுபவம் ஒன்றே அமானுஷ்யம் இங்கு...

இத்தனை செய்த பின்,
இழந்ததை கணக்கிடு எண்ணிக்கை இல்லா ஆயிரம் ஆயிரம்..

அடைந்ததை திரும்பிப்பார்......

ஒன்றுமே இல்லை....

இதுதான் நீ ஏறிய இரண்டாம் படி..

நீ கண்ட காயங்கள் அத்தனைக்கும் மருந்து
நீ நீயாக இருப்பதே....

எத்தனை நேரினும்,
அம்பு போல் நெம்பு,
தேடிய புதையல் அன்றுதான் முடியும்..
தேடலின் தாகம் சட்டென தனியும்..

மூன்றாம்படி ஏறியதும் சொல்கிறேன்..

ஏறாவிட்டால் எனைப்போல் நீயாயினும் சொல்வாய்...

ஏதாயினும் ஓர் நாள்
முடியும் முடிவிலி.



....மனோஜ் இராதாகிருஷ்ணன்...

எழுதியவர் : ....மனோஜ் இராதாகிருஷ்ணன்... (6-Mar-16, 5:54 pm)
சேர்த்தது : Manoj Radhakrishnan
பார்வை : 66

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே