என்னுயிரே

விழியில் விழுந்த
பிம்பத்துளி நீ-என்
இதயம் உடைத்த
இன்பஉளி நீ

எல்லையில்லா அன்பின்
முதற்புள்ளி நீ - என்
காதல் கற்பனையின்
முடிவிலி நீ

என் சுதந்திர வானின்
சொந்தநிலா நீ
என் மாலையில் நிகழும்
மாயஉலா நீ

அமைதியை துளைத்து
அரற்றுவாய் இதயத்தில்
அழையா நொடியாய்
பரவுவாய் உதிரத்தில்


பார்க்கும் இடங்களில்
பரப்புவாய் உன் வாசம்
பாழ்மனம் தன்னில்
செய்வாய் வாசம்

கண்முன் விரிந்து
காட்சிகள் தருவாய்
கண்இமைக்க மறைந்து
காயமும் தருவாய்

இளமை நாட்களில்
மாற்றமும் தருவாய்
எழுதா நாட்குறிப்பில்
ஏமாற்றமும் தருவாய்

இருவேறு நிலைகள்
காதலில் - என்னுயிரே
எதைநான் சுமக்க...?

இருவேறு விளைவுகள்
காதலில் - என்னுயிரே
எதைநீ அளிப்பாய்...?

எழுதியவர் : midila (7-Mar-16, 10:56 pm)
Tanglish : ennuyire
பார்வை : 177

புதிய படைப்புகள்

மேலே