உணர்ந்து கொள்ள
பாரம் பாசம் பாகம்
பங்கு கொள்ள
தூய்மை தானம் தவம்
ஞானம் கொள்ள
குடும்பம் கோவில் கூடு
அமைதி கொள்ள
நீதி நெறி நேர்மை
கண்ணியம் கொள்ள
குன்று குகை வனம்
வாசம் கொள்ள
பாரி குமணன் கண்ணன்
குணம் கொள்ள
அன்பு அறம் அறிவு
பண்பு கொள்ள
ஆசை ஆணவம் அகங்காரம்
விலகிக் கொள்ள
மேன்மை மென்மை வாய்மை
தெரிந்து கொள்ள
வேதம் வேகம் விவேகம்
புரிந்து கொள்ள
நம் உள்ளம் ஒன்றே
அத்தனையும் கொள்ள
சாந்தமும் சமாதானமும்
நம்மிடம் குடி கொள்ள
உலகமும் முழுமையும்
உணர்ந்து கொள்ளும்
உண்மைக்கு சான்றாக
மனிதர் வாழ்வார்
ஏட்டி போட்டி எதுவும் இல்லா
அமைதியில் உலகம் காண்போம்