Magalir Dhinam
குழந்தையாய் உன்னை முதல் முறை கையில் ஏந்தும் ஒவ்வொரு தந்தைக்கும் கடமை எனும் காவலை நீ கொடுத்தாய்...
தன்னையே உன்னுருவில் பார்த்திட உன் தாய்க்கு தவமிருந்த பாக்கியம் நீ கொடுத்தாய்...
தமயனோடு நீ பிறந்ததால் தன் கவலைகள் மறந்து அவனிருப்பான் இன்னொரு தாய் அவனுக்கு கிடைத்த மகிழ்ச்சியிலே...
உன் கண்ணியம் முதலில் பார்க்கும் பயன் உன் தோழனுக்கே...
மனம் சிதறா உன் பேச்சினிலே உனக்கு துணையாய் அவன் என்றும்...
ஆண்மகன் அடையாளமே உன் ஆதி முதல் அந்தம் வரை அவனுக்கு உன்னை நீ சமர்பிப்பதால்...
இருளில் மூழ்கிருந்தும் உன் கருவறையே சொர்க்கம் என வாழும் உன் குழந்தையின் பாக்கியம்...
காலம் முடிந்த பிறகும் கதை சொல்லி, பிறர் வாழ வழி சொல்லி...
மனமகிழ உன் வாழ்த்துக்கள் சொல்லும் உன் பரந்த மனமே...
எத்தனை பரிமாணம் உன் வாழ்க்கையிலே அத்தனையும் அடங்கும் உன் பேரன்பிலே...
என்றும் மென்மேலும் போற்றி புகழ்ந்திட, எல்லா துறை பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...