மதங்களை கடந்து மனிதத்தை போற்றுவோம்

நபிகள் நாயகமும்
ஏசுவும்
விவேகானந்தரும்
இங்கு
மதங்களின் அடையாளமாய்
மாற்றியவன் யார்?
அவர்கள் மனிதத்தை
அல்லவா வளர்த்தார்கள்...
மதவெறியை தூண்டி விட்டவன் யார்?
மதம் என்பது
மணல் கொண்ட எழுத்து
அன்பெனும் ( மனிதாபிமானம்)
கடல் அலை
இல்லாமல் மாற்றும்..
கண் எல்லா நிறங்களையும் காட்டும்
நாம் தான்
கருப்பு கண்ணாடி போட்டு கருப்பாகவும்...
பச்சை கண்ணாடி
போட்டு பச்சையாகவும்...
சிவப்பு கண்ணாடி
போட்டு
சிவப்பாகவும்
பார்க்கிறோம்...
மதம் என்ற
மூன்று எழுத்து
அன்பு என்ற
மூன்றெழுத்தாய்
உரு பெறட்டும்
கை கூப்பி கும்பிடுவதும்
கை நீட்டி வேண்டுவதும்
இறைவனை வேண்டுதலின் முறை
என்பதை விட
அன்பை வெளிப்படுத்தும்
முறைகள்
மதங்களை கடந்து...
எப்படி என்று
வினவுதல் வேண்டாம்
கை கூப்பி மனிதர்களை
வரவேற்கிறோம்...
கை நீட்டி ஆரத்தழுவிக் கொள்கிறோம்...
மதங்கொண்ட யானைகளே
இதை எந்த மதத்திற்குள்
இழுத்து விடுவீர்கள்...
நபிகள் நாயகமும்
பெரியோர்களை (மனிதர்களை)
கை எடுத்து வணங்குவார்...
மரியாதைக்காகவும்...
விருந்தோம்பலுக்காகவும்...
விவேகானந்தரும்
ஆரத்தழுவிக் கொள்வார்
ஆருயிர் நண்பர்களை...
மதங்களை கடந்து
மனிதத்தை போற்றுவோம்
~ பிரபாவதி வீரமுத்து