அலைபேசும் கடலோரம்..........

இளங்காற்று
இதயம் வருடும்
இதமான மாலை.......

இளந்தென்றலுக்கேற்ப
இசை படும்
இளந்தென்னையடி......

வெண் மணலில்
கை புதைக்க
வெதுவெதுப்பாய்
வெளிவரும் இளஞ்சூடு....

புதிதாய் இவ்வனுபவம்
புத்துணர்வு என்னுள்
புதிதாய் பூக்கச்செய்கிறது......

அலைந்து வரும்
அலைகளெல்லாம்
வாழ்க்கையின் ரகசியத்தை
வாஞ்சையுடன்
வலிந்துரைக்கிறது.......

எழுதியவர் : பு.நிரோஷன் (9-Mar-16, 9:49 am)
பார்வை : 165

மேலே