பயணம் போடும் பாதை

சுவற்றை ஒட்டி வாழ்கின்ற
பல்லி போலே
உன்னை ஒட்டி
வாழ்கின்றேன்
என்னை விட்டு
தள்ளி எட்டு
வைக்கயிலே
இலையுதிர் கால
இலையை போலே
முறிகின்றேன்
விளக்கு உள்ள
இடத்திலே
ஈசல் வாழும்
நானும் உன்
ஈசல் தான்
நீ அணைவதற்கு
முன்னாலே
உன்னில் விழுந்து
எரிகிறேன்..
புழுவை போட்டு
மீனை பிடிக்கும்
வித்தை தெரிந்தவன் நீயடா...
சிரிப்பை தூவி
உயிரை வாரும்
அநேகனடா நீ...
சிக்கு கோலத்தில்
சிக்கி கொண்டவள்
நானடா
விரும்பி உன்னில்...
~~~~~~~~~~~~~~~~~~
சாமி பார்க்க
தோளில் தூக்கி
வைத்தது
என் குலசாமி(அப்பா)
எனை...
~ பிரபாவதி வீரமுத்து