சூரியன்

சூரியன் தினமும் காலையில் உதித்து
ஒளி தந்து மாலையில் அஸ்தமிக்கிறது;

இடி, மழையைப் பற்றிய கவலையின்றி
நித்தமும் தன கடமையைச் செய்கிறது;

காலங்காலமாகச் செய்து வரும் கடமைக்கு
கடவுளிடம் கையூட்டு எதுவும் கேட்பதில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-16, 4:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : sooriyan
பார்வை : 158

மேலே