சுற்றுச்சூழல் நண்பருக்கு வாழ்த்துக்கவி

நடராஜன் பெற்ற
மகராஜன் நீ
லோகநாயகி ஈன்ற
யோகநாயகன் நீ

நெகிழிக்குத் தடையிட்டு
இயந்திரத்தின் நெஞ்சை
நெகிழவைதவன் நீ
இயற்கையின் நெஞ்சை
மகிழவைத்தவன் நீ

இயற்கையைக் காக்க
இந்திய தேசத்தில்
எருதுபோல் உழைத்தாய்
இந்திராகாந்தி பெயரில்
தேசிய விருது பெற்றாய்

உன் மொழிப்பறையால்
சுற்றுச்சூழல் விழிப்பறை செய்து
புதுவையின் புற்றுச்சூழலுக்கு
முற்றுவைத்துச் செழிப்பறை செய்தாய்

பிள்ளையார்குப்பத்துப் பிள்ளை
நீ குப்பையிலும் மலரவைத்தாய் முல்லை

உன் மெய்யின்
இரு கைகள்தான்
இயற்கை அமர
இருக்கை செய்தது
உண்மையில் இயற்கையின்
இமையில் மைதீட்டி
அழகு செய்தது

காரில் சிறந்தது b m w
அதனினும் மேலாய்
உன் ஊரில் நீதான் b m w (bright man in the world )

நீ எவர்கிரீன் இயக்கம்மூலம்
ஏழைக்கு உதவும்
பவர்கிரீன்

உன் பேனா மை
குறையும்போதெல்லாம்
தூய்மை நிறைந்தது புதுவையில்

உனைக்கண்ட நெகிழியெல்லாம்
மக்கிப்போகாமல்
உன் செயல் கண்டு சொக்கிப்போனது

உன் கண்பட்டக் கழிவுநீரெல்லாம்
புண்பட்டுப்போனது உன் செயல் கண்டு
மண்விட்டுப்போனது

மேஷத்தில் பிறந்த நீ
தேசத்தில் மட்டும் சிறக்கவில்லை
பாசத்திலும் சிறந்தாய்
நீ பரணியில் பிறந்தது
தரணி ஆளத்தான்

நீ phd in honest and dedication

ரமேஷ் எனும் மூன்றெழுத்தை
நான் கணினியின் தட்டும்போதெல்லாம்
நேர்மை எனும் மூன்றெழுத்தே திரையில் காட்டியது
அது உன் அன்னை தாய்ப்பாலோடு திகட்ட ஊட்டியது

அன்பு நண்பரே உம் பணி
மேலும் சிறக்கவேண்டும்
உன் புகழ் வானில் பறக்கவேண்டும்

எழுதியவர் : குமார் (9-Mar-16, 7:34 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 362

மேலே