உணர்வுகளின் உழறல்கள்.......

வலிய நீயாக
வந்தாயடி என்னுள்
வலிகள் தீயாக
தந்தாயடி......

கண்ணெதிரே நேற்று
கலைமானாக நீ
கலைந்ததும் காதல்
மூண்டெழும் சோகத்தீ......

முத்தங்கள் தந்த
சத்தங்கள் நித்தம்
கனவெல்லாம் கோடி
யுத்தங்கள் காட்டுதடி.....

உன்னை ஏனடி
கண்டேன் அன்று
உழறல் ஏனடி
கொண்டேன் இன்று

வாழ்வேனடி காலுடன்
வாழ்கை முழுதுமல்ல
நீ இன்னோரவனுடன்
நிலையாய் வாழும்வரை.......

எழுதியவர் : பு.நிரோஷன் (11-Mar-16, 8:14 pm)
சேர்த்தது : Puvanenthiran Niroshan
பார்வை : 101

மேலே