சிவராத்திரி

ஒலிபெருக்கி ஒருபுறம்
மூதாட்டிகள் ஒருபுறம்
சிவநாமம் துதிக்க!!
பசியுடன் பக்தி பாடல்களை
முனுமுனுத்து கொண்டிருந்த தருணம்!!
அபிஷேக பாலை
புட்டியில் அடைத்து
ஓரமாய் அமர்ந்திருந்த அன்னையிடம்
ஓடி வந்து ஒப்டைதான் சிறுவனொருவன் !!
அழுக்கு சேலை முந்தானையின்
மறைத்து வைத்து கொண்டு !!
திருவிளையாடல் திரைப்படத்தை ரசிக்க
மடியில் உறங்கி கொண்டிருந்த
இளைய மகனை எழுப்பினாள் !!
இரண்டாம் கால பூஜை முடிந்த தருணம்
தேனிருக்காக
வரிசையில் காத்திருந்தனர்
நின்றிருந்த பணம் படைத்த
பெண்ணொருத்தி பிச்சைக்கார சிறுவன்தானே!!
கொஞ்சம் தள்ளி நிக்கட்டும் என்றாள் !!
வரிசையின் முடிவில் காகித குவளயில்
கிடைத்த தேனீரை
பகிர்ந்தளித்துவிட்டு
அன்னையின் அருகில் நின்றிருந்த
இளம் பெண்ணுக்கு இடமளித்து
எழுந்து நின்று!!
ஓட்டை சட்டை பையிலிருந்த
சீப்பினை எடுத்து வாரினான்
நான் கண்ட கதாநாயகன்!!!
யார் பிச்சை காரர்???