பாதச் சுவடுகள்
அறியாது நான் இருந்தேன் !
அன்போடு நீ இருந்தாய் !
அடியெடுத்து வைக்கையிலே ;
அகன்று சென்றாய் எனைவிட்டு !
ஆழ்மனதில் அடித்த ஆணியாக ;
அகலவில்லை நெஞ்சை விட்டும் !
விட்டுச்சென்ற உன் நினைவுகள் -
விட்டும் போகாது - ஒருபொழுதும் !
படிப்படியாய் உயர்ந்ததெல்லாம் ;
பண்பட்ட உன் வாழ்வை -
பாதச் சுவடுகளாய் -
பற்றிக்கொண்டதனால் !
பாதச் சுவடுகள் -
பாரெல்லாம் பல இருக்க ;
பயமொன்றும் எனக்கில்லை ;
பசுமையாய் வாழ்ந்திடுவேன் !